பாலிசி புதுப்பித்தல் - (revival of policy)
''பாலிசிக்கான பணத்தை ஒன்றிரண்டு மாதம் கட்டவில்லை எனில், அபராதத்துடன் அந்த பிரீமியத்தைக் கட்டி பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆனால், ஆறு மாதத்திற்கு மேல் பிரீமியம் கட்டாமல் விட்டால், அந்த பாலிசி 'லேப்ஸ்’ ஆகிவிடும். இந்த பாலிசியைப் புதுப்பிக்கும்போது, நீங்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதாவது, உடல்நலச் சான்று, உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் ஒரு சாட்சி கையெழுத்து வாங்கி தருவது போன்ற வற்றை செய்யவேண்டும். இதில் மருத்துவச் சான்று என்பது ஒரு விண்ணப்பமாக இருக்கும். இதை பாலிசிதாரர் பூர்த்தி செய்து, உரிய கிளையில் ஒப்படைக்கவேண்டும்''
நோக்கம்..!
ஆயுள் காப்பீடுங்கறதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுக்கிறதுதான். அந்தப் பாதுகாப்பைப் போதுமான அளவுக்கு ஒருத்தர் செய்திருந்தார்னா, அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாக் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் இப்போ வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும். சுதாரிச்சுக்கறதுக்கு அவகாசம் கிடைச்சுடுச்சுன்னா, அந்தக் குடும்பம் தட்டிமுட்டி மேலேறி வந்திடும். அந்த அளவுக்காவது வழி செய்யறதுதான் இன்ஷூரன்ஸ்!
ஆனா, நம்ம நாட்டுல பல பேரு இன்ஷூரன்ஸைப் பாதுகாப்புனு பார்க்காம முதலீடாத்தான் பார்க்கிறாங்க. ‘வருமான வரி வந்துடும்... அதனால ஒரு பாலிசி போட்டேன்...’, ‘இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...’ -இப்படிப்பட்ட நினைப்புல பாலிசி எடுக்கறவங்கதான் நிறையப் பேர்! இருந்தாலும் இன்ஷூரன்ஸ் எடுக்கறாங்களே... அந்த வகையில சந்தோஷம்தான்!

No comments:
Post a Comment