Sunday, October 27, 2013

குடியை மறப்போம்!!!! குடும்பத்தை காப்போம்!!!!

குடியை மறப்போம்!!!! குடும்பத்தை காப்போம்!!!!

தற்பொழுது பண்டிகை காலம், வருடம் முழுதும் உழைத்து சேர்த்த பணம் போனஸ், மற்றும் சேமிப்பு வடிவில் கைக்கு வரும் நேரம். நண்பர்களே சிந்தியுங்கள், வியர்வை சிந்தி உழைத்த பணம் உங்கள் குடும்பத்துடன் மகிழ்சியாக பண்டிகை கொண்டாடவா அல்லது உங்கள் உயிர் கொல்லி மது அருந்தவா? குடும்பம் மகிழ்வுடன் பண்டிகையை கொண்டாடுவதில் எவ்வளவு ஆனந்தம் , அந்த ஆனந்தத்தை போதை பொருளால் கெட்டுப்போக நீங்களே காரணமாகலாமா? குடிப்பதனால் நீங்கள் மட்டும் பாதிப்படைவது இல்லை உங்களது தாய், தந்தை மனைவி மற்றும் உங்களையே எதிர்பார்த்திருக்கும் செல்ல குழைந்தைகள் எல்லோரும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

குடி குடியைக் கெடுக்கும்.......

மது அருந்துவதால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்ப்படும் தீமைகளைப் பாருங்கள் அதன்பிறகு உங்களுக்கு மனமாற்றம் ஏற்ப்படுமானால் நிச்சையம் இந்த பண்டிகையில் உங்களால் தான் உங்கள் குடும்பத்தில் ஆனந்தமும் கொண்டாட்டமும்.

இதை படிங்க...

- போதை பழக்கம் மூளைய மழுங்கடித்து தெளிவாக சிந்திக்க முடியாத படி செய்து விடும்.

- குடும்பத்தில் நிதி நிலை குறைந்து எல்லோரது மகிழ்ச்சியும் போய் விடும்.

- ஏழ்மை நிலைக்கு தள்ளப் படும்.

- சமுதாயத்தில் கௌரவம் குறைந்து எல்லோரது ஏளனப் பார்வைகளைச் சந்திக்க நேரிடும்.

- குடும்பத்தில் சந்தேகங்கள் சண்டைகள் வன்முறைகள் இதனால் குற்றவாளியாகவும் உருவாக நேரிடும்.

- வன்முறைகளினால் மனைவி, பிள்ளைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்படைவர்.

- உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, பேச்சுத்தன்மை, தன்னம்பிக்கை, சுயமரியாதை, மகிழ்ச்சி, படிக்கும் ஆற்றல் எல்லாம் கணிசமான அளவில் பாதிக்கப்படலாம்.

- குடிப்பவரின் ஆண் குழந்தைகள் வளர்ந்து அவர்களும் இதே மாதிரி வாழ்க்கை முறையில் தள்ளப்படுவதற்கான சாத்தியம் ஏற்படும்.

- குடிப்பவரின் மகள் வீட்டில் நடக்கும் வன்முறையைப் பார்த்து ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்ற மனநிலைக்கு தள்ளப்படுவர். பிற்காலத்தில் தனக்கும் இது போல் தான் வாழ்கை அமையும் என்று தாழ்வு மனப்பான்மையும் கொள்ளவர்.

- குடிப்பதனால் உடல் நலமும் மன நலமும் அதிகம் பாதிக்கும்...அதனால் தற்கொலை முயற்சி பத்தி சிந்தனைகளும் ஏற்படும். குடும்பத்தினருக்கு ஆதரவு இல்லாமல் அவர்கள் கையேந்த வேண்டிய நிலைக்கு வருவார்கள் .

- குடிக்கு அடிமையானால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்..அதற்காக ரொம்ப உழைக்க வேண்டி வரும்.

- குடிப்பதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இதனால் குழந்தைகளை சரிவர வளர்ப்பதில் சிரமம் வரும்.

- உயர் இரத்த அழுத்தம், ஈரலில் தாக்கம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் குடிப்பதால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும்.

- மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக மது அருந்துவர், ஆனால் உண்மையில் மது பருகினால் தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

- தேவையான இக்கட்டான நிலையில் விபத்துக்கள் நிகழலாம்.

- உங்களது குடும்பத்தினருக்கோ, அல்லது சக நண்பர்களுக்கோ சிகிச்சைக்காக உங்களால்தான் ரத்தம் தரமுடியும் என்ற நிலை இருந்தால் குடி பழக்கத்தினால் உங்களால் இரத்தம் கொடுக்கமுடியாமல் போகும், இதனால் அவர்களது உயிர் பிரிய நீங்களும் ஒரு காரணமாகலாம்.

- குடி பழக்கம் இல்லாதவர்கள் வெளியே சென்று வீடு வருவதற்கு முன் விபத்து ஏற்ப்பட்டால் அது துரதிஷ்டம். ஆனால் குடிப்பவர்கள் விடுவந்து சேர்வதே அதிர்ஷ்டம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment