Saturday, October 12, 2013

நவராத்திரி

நவராத்திரி

வாணி பூசை ,சரஸ்வதி பூசை என்றழைக்கப்படும்  நவராத்திரி விழா  5.10.1013 தொடங்கி 14.10.2013 விஜயதசமியுடன்

இந்துக்கள் கொண்டாடும் சமய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். ஆலயங்கள் தோறும் இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவிகளுக்குச் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு, விசேட பூசைகள், விழாக்கள் நடைபெறும். மக்களும் இந்த ஒன்பது நாட்களும் விசேடமாக விரதம் அனுஷ்டிப்பார்கள். நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களும் துh;க்கைக்கும் அடுத்த மூன்று நாட்களும் இலக்குமிக்கும், இறுதி மூன்று நாட்களும் சரஸ்வதிக்கும் சிறப்பாக உரியவை.

துர்க்கையிடம் வீரத்தையும், இலக்குமியிடம் செல்வத்தையும், சரஸ்வதியிடம் கல்வியையும் வேண்டி நாம் இந்நாட்களில் விரதம் இருப்போம். இவ்விழாவினைக் கோயில்களில் மட்டுமல்லாது பள்ளிக்கூடங்கள், வேலைத்தலங்கள் என்பவற்றிலும் விசேடமாகக் கொண்டாடுவார்கள். மகிஷாசுரன் என்ற கொடிய அரக்கனை அம்பாள் துர்க்கை வடிவத்தில் தோன்றி வதம் செய்ததையே இவ்விழா நினைவு படுத்துகின்றது.

மாணவர்கள் தம் கல்வியைச் சிறப்பாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவானது பத்தாவது நாள் இடம்பெறும் ஆயுத பூசையுடன் நிறைவு பெறும். பத்தாவது நாளை விஜயதசமி என்றும் அழைப்பார்கள். அன்று சிறுவர், சிறுமிகளுக்கு ஏடு தொடக்குவார்கள். வெவ்வேறு கலை பயில விரும்பும் மாணவர்களுக்கும் அன்று அதற்குரிய பள்ளிக்கூடங்களில் பயிற்சியைத் தொடக்கி வைப்பார்கள்.

No comments:

Post a Comment