Monday, October 7, 2013

அழகாக மாறுங்கள்.

டீ குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்பார்கள்!
தேயிலை உடலுக்கு அழகூட்ட பயன்படும் ஒரு சிறந்த முளிகையும் கூட அதை எப்படி பயன்படுத்தலாம் அன்பதை பார்ப்போம்

இந்த டீயை வைத்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்தால், கண்ணைச் சுற்றி வரும் கருவளையமும் எளிதில் நீங்கும். ஆகவே இந்த டீயை குடிப்பதோடு, அதனை பயன்படுத்தி ஒரு சில ஃபேஸ் மாஸ்க்களை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
டீ மற்றும் வாழைப்பழம் மாஸ்க்: இரண்டு டேபிள் ஸ்பூன் டீ மற்றும் ஒரு வாழைப்பழத்துடன் நன்கு பே1ட் போல் செய்து கொண்டு, முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, ஈரப்பசையுடன் அழகாக இருக்கும். இது ஒரு சிறந்த மற்றும் ஈஸியான ஃபேஸ் மாஸ்க்.

டீ, ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்: அரை கப் ஓட்ஸ் எடுத்து கொண்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, 3 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மென்மையாக தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகமானது மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

டீ, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை மாஸ்க்: இந்த மாஸ்க் ஒரு சிறந்த முகத்தில் இருக்கும் முகப்பருக்களை நீக்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு, பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பிறகு அதனை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதனால் முகத்தில் பருக்கள் போவதோடு, கண்ணிற்கு அடியில் இருக்கும் கருவளையமும் போய்விடும். வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க்கில் எலுமிச்சையை சேர்ப்பது நல்லது.

டீ மற்றும் சாக்லேட் மாஸ்க்: இந்த மாஸ்க்கில் இருக்கும் டீ மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த மாஸ்க் செய்ய 3-4 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் டீயை விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனை முகத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.

டீ மற்றும் கார்ன் ஃப்ளார் மாஸ்க்: 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார், 2 டேபிள் ஸ்பூன் டீ சேர்த்து கிளறி, முகத்திற்கு தடவி 10-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் சற்று பொலிவு பெற்றது போல் தெரிவதோடு, கரும்புள்ளிகளையும், இந்த ஃபேஸ் மாஸ்க் நீக்கிவிடும்.ஆகவே இந்த ஃபேஸ் மாஸ்க் எல்லாம் வீட்டில் செய்து பார்த்து, அழகாக மாறுங்கள்.
Photo: அழகாக மாறுங்கள்.

No comments:

Post a Comment