Sunday, October 27, 2013

கொஞ்சம் உளறிக் கொட்டவா

கொஞ்சம் உளறிக் கொட்டவா
கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
கொஞ்சம் வழியைக் கேட்டேன்அடி கொஞ்சம் கொஞ்சம் வழிகள் தருகிறாய்

நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதைய மூலையில்
நானே இருப்பேன் (2)

கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்க சொன்னேன்
அடி கொஞ்சம் கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்

ஆ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை
இப்போலி வேலியை இன்றாவது உடை (2)

காக்கை தூது அனுப்பிடு
காற்றை வந்து உன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக் கொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால்
உன் கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

என் இதய கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா
ஈருயிராய் சேர்க்க வா
ஒன்றாகிட வா (2)

No comments:

Post a Comment