Wednesday, October 23, 2013

ஆமை மற்றும் முயல் கதை


ஆமை மற்றும் முயல் கதை:-

முயல் வேகமாக ஓடக்கூடியது. அது எவ்வளவு தான் முயற்ச்சியெடுத்து ஓடினாலும் முயலை விட வேகமாக ஓடி வெற்றி பெற இயலாது. ஆமை முயலை எப்படியாவது வெற்றிகொள்ள நாட்கணக்காய் சிந்தனை செய்தது.அதற்க்கு ஒரு புதிய சிந்தனை தோன்றியது. ஆமை நேராக முயலிடம் சென்றது. இந்த வருடமும் போட்டியை நடத்துவோம். ஆனால் போட்டியை வேறு இடத்தில் வைத்துக்கொள்ள ஆமை கேட்டுக்கொண்டது. முயலும் விழிப்புடன் இருந்ததால் எந்த சூழ்நிலையிலும் ஆமை தன்னை தோற்க்கடிக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்மிக்கையில் போட்டிக்கு சம்மதித்தது.
இந்த முறை ஆமை சொன்ன பாதையில் ஒரு ஆறு இருந்தது. போட்டிக்கான இலக்கை ஆமை ஆற்றுக்கு மறுகரையில் இருந்தது. முயல் வேகமாக ஓடி ஆற்றை அடைந்தது. முயலால் ஆற்றை கடக்க இயலவில்லை. ஆமை மெதுவாக வந்தாலும் ஆற்றை விரைவாக கடந்து இலக்கை எட்டியது. இந்தமுறை ஆமை வெற்றி பெற்றது. நாம் தோல்வி அடையும் போது ஆமை போன்று புதிய உத்திகளை தேர்ந்தெடுக்க கற்றுகொள்ளவேண்டும். நாம் வழக்கமான பாதைகளில் சென்றால் ஜெயிக்க இயலாது என்ற நிலை வரும் போது வேறுபாதைகளை தேர்ந்தெடுக்க புது புது உத்திகளை நாம் உருவாக்க வேண்டும். ஒரு இலக்கை அடைய ஒரே ஒரு பாதை தான் உள்ளது என்று நம் எண்ணங்களில் சிந்தனைகளில் உருவானால் அதனை நாம் சிதறடிக்க் வேண்டும். இலக்குகளை அடைய பல்வேறு பாதைகளை நாம் வகுத்து அதில் எந்த பாதையில் சென்றால் அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் வெற்றிபெற இயலும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
முயலுக்கும் ஆமைக்கும் இடையே உள்ள போட்டி முடியவில்லை. அடுத்த வருடமும் தொடர்ந்தது. இந்த வருடமும் அதே பாதை. வழியில் ஆறு. இப்போது முயல் சிந்தித்தது. அது நேராக ஆமையிடம் சென்று நாம் இப்படி போட்டி போட்டுக்கொண்டிருந்தால் மாறி மாறி ஜெயித்துக்கொண்டே இருப்போம். நாம் வெற்றி தோல்வியை பற்றி நினைப்பதை விட மிகக் குறைந்த நேரத்தில் இருவருமே இலக்கை எப்படி அடைவது பற்றி சிந்திப்போம் என்றது.
ஆமையும் முயலின் யோசனையை ஏற்றுக்கொண்டது. இந்த முறை ஓடும்போது ஆறுவரை முயல் ஆமையின் முதுகில் ஏறியது. முயல் வேகமாக சென்றது. ஆற்றை கடக்கையில் முயல் ஆமையின் முதுகில் ஏறியது. முயல் ஆற்றை வேகமாக கடந்தது. ஆற்றை கடந்ததும் மறுபடியும் ஆமை முதுகின் மீது ஏறிக்கொண்டது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றனர்.
குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து நேரத்தை நிர்வகிக்கும் திறனையும் பெற்றனர். இதை தான் நாம் குழு செயல்பாடு என்கிறோம். எந்த செயலையும் தனியாக செயல் படுவதை விட ஒரு குழுவாக செயல் படும் போது கிடைக்கும் வெற்றியின் அளவு கண்டிப்பாக மிகப் பெரிய அளவில் தான் இருக்கும்.
நாம் குழுவாக செயல்படும் போது குறைந்த நேரத்தில் இலக்கை அடைவதோடு, நமது உழைப்பையும் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.குழுவாக செயல்படும் போது வேலை பாதியாகிறது. வெற்றி இரண்டு மடங்காக்கிறது.

No comments:

Post a Comment