Wednesday, October 16, 2013

ஆண்களுக்கான சிறந்த ஃபேஸ்மாஸ்க்


பெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொன்னது இதோ உங்களுக்காக ...ஆண்களுக்கான சிறந்த ஃபேஸ்மாஸ்க்


1.சிறிது புதினா இலைகளுடன், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

2.பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

3.வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் ரோஸ் வாட்டர், ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது கொக்கோ வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவினால், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பிம்பிள்கள் நீங்குவதோடு, மறைந்திருக்கும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்

4.பப்பாளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தேய்த்து ஊற வைத்து நீரில் அலசினால், சருமத்தில் வெயிலின் தாக்கத்தினால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.

5.வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

6.இந்த மாஸ்க்கிற்கு தேவையான களிமண் மூலிகை கடைகளில் கிடைக்கும். ஆகவே அதனை வாங்கி, அதோடு ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், களிமண் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை உறிஞ்சி வெளியேற்றி, முகத்திற்கு பொலிவைத் தரும்.

No comments:

Post a Comment