Wednesday, October 2, 2013

நீதிக்கதைகள் :-


நீதிக்கதைகள் :-

கழுதைஒன்று, நிறைய பொதி சுமந்துகொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர்வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும்வழியில் புல் தரையைப்பார்த்ததும் ,கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத்தூங்கினார் எஜமானர்.

கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத்தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.

பொறுத்துப் பொறுத்துப்பார்த்தநாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசிதாங்க முடியவில்லை. எஜமானரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழேபடு. உன்பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக்கொள்கிறேன்” என்றுகெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப்புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.நாயும் விடாமல் கெஞ்சிக்கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவுதாங்காத கழுதை, “என்னப்பா அவசரம் எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர்சாப்பிடும் போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறுவழியில்லாமல் நாய் சோர்ந்து போய்படுத்துக்கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை ,“நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக்காப்பாற்று” என நாயைப் பார்த்துகதறியது.

படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்திரிக்காமல், “ஏன்அவசரப்படுகிறாய்?கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.

கழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்ததவறை நினைத்துவருந்தியது.

நீதி: நாம்மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

No comments:

Post a Comment