Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Monday, February 2, 2015

எச்சரிக்கை...

#‎எச்சரிக்கை‬
தாய் தமிழ் உறவுகளுக்கு மன வேதனையுடன்
என்னைப் போன்ற நாம் தமிழர் பிள்ளைகளுக்கு எங்களின் நலனை விட இனத்தின் நலனே முக்கியம் என்று அதிலும் நான் ஈழத்தையும்,தலைவரையும் என் உயிரினும் மேலாக நேசித்து அவர்களை என் உடலிலே சுமந்துகொண்டு திரிபவன்,ஈழத்து உறவுகளை உயிருக்கு இணையாக நேசிப்பவன்,நான் வைத்துள்ளது ஒரு சிறிய பெட்டிக்கடை தான் இருந்தாலும் எந்த போராட்டம்,கூட்டம்,ஆர்ப்பாட்டம் என்றாலும் கடையை அடைத்துவிட்டு இனத்தின் விடுதலைக்கான பயணத்தில் பயணம் செய்வேன்,என் சக்திக்கு மீறி எனது பங்களிப்பை செய்து வருகிறேன்,இப்படி இருக்கும் நிலையில் இங்கு இருப்பவர்கள் பலர் நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் என்றால் தன்னை ஈழத்து தமிழச்சி என்று சொல்லி பலர் ஏமாற்றுகின்றனர் இதுபோல கடந்த வாரம் அண்ணன் திருச்சி ‪#‎துரைபாண்டியன்‬ சொன்னார் என்பதற்காக அவர் அந்த ஈழத்து அக்கா மீது வைத்த நம்பிக்கையில் என்னிடம் ஒரு பார்சல் வாங்கிவைக்க சொன்னார் தன்னுடைய கணவர் கனடாவில் இருந்தது மருந்து மற்றும் திரவியங்கள் கொடுத்து அனுப்பி உள்ளார் குருவியிடம் 48௦௦பணம் கொடுத்து அந்த அக்கா உன்னிடம் முப்பதாம் தேதி வாங்கிகொள்வார்கள் என்று சொன்னார் உண்மையை சொல்லப்போனால் என்னிடம் அப்போது பணமே இல்லை ஆனால் அண்ணன் சொன்னாரே என்றும் ஈழத்து அக்காவாயிற்றே என்று மாதத்தின் கடைசி நாள் வங்கி கடன் தவணைத் தொகை கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அந்த பொருளை வாங்கி வைத்து விட்டேன்,பொருளை நான் கூட வாங்கவில்லை என் அப்பாவிடம் பணம் கொடுத்துவிட்டு அப்பாவிடம் குருவி எண் கொடுத்து அந்த பார்சல் வாங்கி வையுங்கள் அப்பா என்று சொன்னேன் அவரும் வாங்கி வைத்து விட்டார்,முப்பதாம் தேதி வந்தது துரை அண்ணனுக்கு அழைத்தேன் அண்ணன் சொன்னார் தம்பி அவர்களிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று பின்பு நீண்ட நேரம் அழைத்தும் யாரும் எடுக்கவில்லை பின்பு அலைபேசி அனைத்து வைக்கப்பட்டது உடனே துரைபாண்டியன் அண்ணன் அந்த பார்சல் பிரித்து பார்க்க சொன்னார் எனக்கு அது தவறு என்று தோணியது பின்பு அண்ணன் சொன்னார் என்று பிரித்து பார்த்தல் அதன் உள்ளே மூன்று கோதுமை பாக்கெட்,உப்பு பாக்கெட் இருந்து பார்த்து அதிரிச்சி அடைந்தேன்,கண் தானாக கலங்கியது, அந்த அக்கா தனிசெய்தில் போய் நான் பேசினேன் எனக்கு அம்மை போட்ட காரணத்தால் சென்னைக்கு வர முடியவில்லை,நீங்கள் உங்கள் வங்கி கணக்கு முகவரி அனுப்புங்க பணம் இட்டுவிடுகிறேன் என்று சொன்னார் நானும் கொடுத்தேன்,கடைசிவரை பணம் போடவில்லை என்னை பிளாக் செய்து விட்டு போய்விட்டார்கள்,இதனால் வங்கி கடன் தவணைத் தொகை கூட கட்ட முடியாமல் திணறினேன்,இந்த ‪#‎bhavani_sree_eelam‬ என்ற பெண்மணி என்னை மட்டும் ஏமாற்றவில்லை,இன்னும் மூன்று பேர் ஏமாந்து உள்ளனர் எனக்கு தெரிந்து இவர்கள் மட்டுமே,இன்னும் தெரியாதவர்கள் எத்தனை நபரோ,இன்னும் இவர்கள் எத்தனை பேர் ஏமாற்ற போகின்றன தெரியவில்லை இனி ஏமாறாமல் இருக்க தான் இந்த பதிவு....
‪#‎அக்கா‬ உட்பட ஈழத்து உறவுகள் உங்களுக்கு உதவி தேவைபட்டால் கேளுங்கள்நாம் தமிழர் பிள்ளைகள் முடிந்த அளவிற்கு செய்கிறோம் குறிப்பாக நான் கடனுக்கு வாங்கியாவுது உங்களுக்கு உதவுவேன் அதைவிட்டுவிட்டு இதுபோன்ற நம்பிக்கை துரோகம் மட்டும் இனி செய்ய வேண்டாம்,மீண்டும் மீண்டும் துரோகத்தால் எங்களை வீழ்த்தவேண்டாம்...
‪#‎தமிழரின்‬ தாகம் தமிழீழ தாயகம்..

நல்ல தம்பி

Sunday, November 16, 2014

கண்களே..கண்களை நம்பாதே..


கண்களே..கண்களை நம்பாதே..
--------------------------------

அவசரமாய் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எதையும் நின்று பார்த்து நிதானமாய் யோசித்து முடிவு செய்யும் பொறுமை யாருக்கும் இல்லை.

நம் அறிவுக் கண்களைக் குருடாக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் ஏமாந்து போய் விடக் கூடாது.

காந்தியையும், நேருவையும் இழிவுபடுத்தும் பல்வேறு வகையிலான முயற்சியில் சிலர் திட்டமிட்டு இறங்கியுள்ளனரோ என்கிற ஐயம் எழும்பியிருக்கிறது.

அந்த வகையில் இன்னும் பல புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப் போது உலா வரலாம்.

நாம்தான் கவனமாய் இருக்க வேண்டும்.

கண்ணால் காண்பதுவும் பொய்..காதால் கேட்பதுவும் பொய்..!
 

Sunday, November 2, 2014

மழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்!


மழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்!


''சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் போன்ற இணையதளங்களில், இளைஞர்கள் பலரும் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடப்பது நினைவாற்றல் திறன் முற்றிலும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலுக்கும் தீங்கும் ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.

இதனால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. உதாரணத்துக்குச் சில சம்பவங்கள்:
சம்பவம் 1: பிரபல கல்லூரியின் பேராசிரியர், எப்போதும் கையில் செல்போன் வைத்திருப்பார். அதில், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று பிஸியாக இருப்பதால், தினமும் வகுப்பறைக்கும் செல்போன் எடுத்துச் செல்வதும், அடிக்கடி போனை எடுத்துப் பார்ப்பதுமாக இருப்பார். காலையில் விழிப்பதும், தூங்குவதற்கு முன்பு கடைசியாகப் பார்ப்பதும் சமூக வலைத்தளங்களில்தான். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி, வகுப்பு எடுக்கவேண்டிய நேரத்தையும் மறந்து வெவ்வேறு வகுப்பறைக்குச் சென்றுவிடுவார். இதனால் கல்லூரியில் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. மாணவர்கள் அவரை 'மிஸ்டர் மெமரி லாஸ்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அளவுக்குப் பிரச்னையானதால் அவர் தற்போது தீவிர சிகிச்சையில்.
சம்பவம் 2: ப்ளஸ் டூ படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவி அவர். கையில் எப்போதும் ஆறாம் விரல்போல் மொபைல் போன் ஒட்டிக் கொண்டு இருக்கும். சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம் இன்றி, கழிவறை போனால்கூட கையில் மொபைலைப் பார்த்தபடியே இருப்பார். எஸ்.எம்.எஸ், சேட்டிங், ஃபேஸ்புக் என்று எந்த நேரமும் பிஸியாக இருந்ததால் 10ம் வகுப்பில் 96 சதவிகிதம் மதிப்பெண் வாங்கியவர், சமீபத்தில் நடந்த பள்ளி காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் பெயில். மாணவியின் டி.சி.யைப் பெற்றுக்கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துகிறது. தற்போது அந்த மாணவிக்கு மனநல மருத்துவர் தீவிரச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்.
சம்பவம் 3: சமூகப் பிரச்னைகளைக் குறித்து களத்தில் இறங்கி வேலை பார்க்கும் நல்ல போராளி அவர். சமீப காலமாக மணிக்கு ஒரு ஸ்டேடஸ் போட்டு ஃபேஸ்புக்கில் மூழ்கி கிடந்ததால் அவரது நினைவாற்றல் திறமை மங்கியது. அலுவலகத்தில் ஊழியர்களிடம் எதையாவது சொல்வார். அவர்கள் அதைச் செய்ததும், 'நான் எப்போது சொன்னேன்...? இந்த வேலையை நான் சொல்லவே இல்லையே’ என்று சாதிக்கும் அளவுக்கு ஞாபகமறதி பிரச்னை அதிகரித்துவிட்டது. இவரும் தற்போது மனநலமருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று வருகிறார்.

சோஷியல் மீடியாவில் மூழ்கிப்போனவர்களின் இன்றைய எதார்த்த நிலை இதுதான். ஏதோ ஒருவர் இருவருக்கு மட்டும் அல்ல. தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிச்சயம் நினைவாற்றல் பாதிப்பு ஏற்படும் என்று ஆணித்தரமாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசங்கரியிடம் பேசினோம்.
'மணிகணக்கில்.
.. நாள் கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி, உற்றுப் பார்த்துக் கொண்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல், கையில் கிடைக்கும் பீட்ஸா, பர்கர், கூல்டிரிங்க்ஸ், நொறுக்குத் தீனிகள் போன்ற ஜங்க் ஃபுட்களைச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதால் மனம் மட்டும் அல்லாமல் உடலும் கெட்டுப் போய்விடுகிறது. இதனால், மூளையும் பலவீனமடைகிறது. இந்தச் சமூக வலைதளத்தால் குழந்தைகள், நடுத்தர வர்க்கத்தினர்... என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். கஞ்சா, மது போதைக்கு ஒருவர் எப்படி அடிமையாக இருக்கிறாரோ, அதற்குச் சமமானதுதான் இந்த வலைத்தள போதையும்.

நம்முடைய மூளையில், 'டோபோமைல்’ மற்றும் 'ஷெரப்போநைன்’ போன்ற திரவங்கள் சுரக்கின்றன. ஒரே விஷயத்தில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு இந்த இரண்டு ரசாயண வேதி பொருள் சுரப்பதில் பிரச்னைகள் ஏற்படும். இது சரியாக இல்லாவிடில் மனசிதைவு, மனசோர்வு, மனஅழுத்தம், மனப்பதற்றம்... போன்றவை ஏற்படும். மனித மூளையில், 'இப்பாப்கேம்பஸ்’, 'அமித்தலா’ போன்ற இடங்கள்தான் நம்முடைய நினைவாற்றல் தொடர்பான செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள் சரியாகச் சுரக்காதபோது, இந்தப் பகுதிகள் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சேர்த்துப் பாதிக்கப்படுகின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு வீடியோ கேம்ஸ், நெட்டில் சாட் செய்வது, இணையத்தில் அதிகமாகப் பேசுவது போன்ற செயல்களால் நரம்புகள் மற்றும் முதுகுதண்டுவட அமைப்பு பாதிக்கப்பட்டு உடல் வலியோடு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன!

இதுதவிரவும், ஒற்றை தலைவலி, கண் எரிச்சல், நினைவாற்றல் மங்கும்திறன்... என்று பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் இளைய தலைமுறைதான் இந்த சோஷியல் மீடியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சோஷியல் மீடியா வெறும் மனம் மற்றும் உடல் நலப் பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பல நேரங்களில் அது சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களுக்கும் வழிவகுத்துவிடுகிறது' என்றவர் இதில் இருந்து எச்சரிக்கையாக இருப்பதற்கான வழிகளைச் சொன்னார்.

தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாடுகள் எந்த நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.

அதிக நேரம் இணையத்தளங்களில் உலா வருவதை நிறுத்தவேண்டும்.

நாட்டு நடப்புகள் பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகபட்சமாக அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.

கடினமான, மிக இறுக்கமான அலுவலக சூழலில் வேலைபார்ப்பவர்கள் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்துகொள்ள ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள் செல்லலாம். ஆனால், அந்தப் பக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்தச் சூழலைத் தவிர்ப்பதற்கு புத்தகம் படிக்கலாம். நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசலாம்.

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டில் அதிகம் ஈடுபடலாம். எழுதுவது, பிடித்த பாடல்களைக் கேட்பது, ஒவியம் வரைவது, தாத்தா- பாட்டி போன்ற பெரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, வீட்டை நிர்வகிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் மூளைக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்ள் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சமூக வலைதளங்களின் தேவை இல்லை. எனவே, பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் சமூக வளைதளத்தில் நேரத்தைச் செலவிடும்போது அது கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தலாம்.

எந்த ஒரு விஷயமும் நமது கட்டுபாட்டுக்குள் இருக்கவேண்டும். கட்டுபாடு இல்லாமல்போனால், அதற்கு நாம் அடிமையாகி விடுவோம். இனிவரும் காலங்களில்... இன்னும் இதுபோன்ற ஏராளமான பிரச்னைகள் நம்மை தாக்குவதற்குக் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஏனென்றால் உலக அரங்கில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா இடம்பெற்றிருக்கிறது என்பதுதான் நடுங்க வைக்கும் நிஜம்!'' என்று எச்சரித்தார்.

நம் நினைவாற்றலை மெல்ல மெல்ல கொல்லப்போகும் 'வலை’யில் இனியும் வீழத்தான் வேண்டுமா?
- சண்.சரவணக்குமார்

நினைவிழக்கும்... நினைவாற்றல்!

'ஷார்ட் டேர்ம் மெமரி’ எனப்படும் குறுகிய கால நினைவாற்றல் நம் எல்லோருக்கும் உண்டு. நாம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள இது பெரிதும் உதவியாக இருக்கிறது. இது, குறைவான தகவலை மட்டுமே தன்னுள் வைத்துக்கொள்ள முடியும். தொடர்ந்து சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிடும்போது இந்த 'ஷார்ட் டோம் மெமரி’ பாதிக்கப்படும். ஒரு விஷயத்தில் நாம் கவனம் செலுத்தும்போது, அதுதொடர்பாக தகவல் நம்முடைய 'வொர்க்கிங் மெமரி’ எனப்படும் பகுதிக்கு போய் சேரும். அங்கு, நம்முடைய மூளை அந்த தகவலை பதிந்துகொள்ளும். ஆன்லைனில் இருக்கும்போது நிறைய விவரங்கள் மூளைக்கு செல்கின்றன. அதிகப்படியான தகவல் வரும்போது அதை கையாளும் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக 'ஷார்ட் டோம் மெமரி’ பாதிக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
thanks to Dr.vikatan..

'வாட்ஸ் அப்' விபரீதம்!

'வாட்ஸ் அப்' விபரீதம்!

 
மனிதகுலம் முன்னேறுவதற்கும், பல்வேறு தகவல்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் விரைவில் போய்ச் சேரவும்தான் சமூக வலைத்தளங்கள் தோன்றின.
கூகுள், ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் வரிசையில் தற்போது, மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்ற சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் அதிகளவில் நண்பர்களை இணைப்பதில் “வாட்ஸ் அப்“ முன்னணியில் இருக்கிறது.
வாட்ஸ் அப்பின் திடீர் அசுர வளர்ச்சியைக் கண்டு அசந்துபோன ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது தெரிந்த தகவல். ஆனால், பல்வேறு வசதிகளைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், வழக்கம் போலப் பெண்களை அச்சுறுத்தும் காரியங்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

‘முகம் தெரிந்த நண்பர்களை மட்டுமே இணைக்கும் தளம்’ என வாட்ஸ் அப் கருதப்பட்டதால்தான் பெண்கள் வட்டத்திலும் வாட்ஸ் அப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் வாட்ஸ் அப்பிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது சமீபகாலமாக நிரூபணம் ஆகிவருகின்றன. மற்ற வலைத்தளங்களைக் காட்டிலும் வாட்ஸ் அப்பில் தகவல் எளிதில் பரிமாறப்படுவதாலும், யார் தகவலை உருவாக்கினார்கள், எப்படிப் பரவியது என்பது குறித்து உடனடியாகப் போலீசாரால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் பல்வேறு தவறான தகவல்கள் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன.



ஏன் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை?

வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில், ஒரு பெண் தனது புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் என வைத்துகொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கு விரும்பத்தகாதவர், அந்தப் பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது போட்டோவை இணைத்து சில ஆடியோ, வீடியோக்களை உருவாக்கி அதனை எளிதில் வாட்ஸ் அப்பில் பரப்ப முடியும். இதனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் எந்தவித சமூக வலைதளங்களில் இருந்தாலும் முடிந்தவரை தங்களின் புகைப்படங்களைப் பதிவேற்றக் கூடாது. ‘‘வாட்ஸ் அப்பில், நான் எனக்குத் தெரிந்தவர்களுடன் மட்டுமே தொடர்பில் இருக்கிறேன். எப்படி எனக்கு ஆபத்து வரும்“ என நீங்கள் நினைக்கலாம். வாட்ஸ் அப்பில் உங்களுக்குத் தெரிந்தவர்களை மட்டுமே நீங்கள் இணைத்தாலும் உங்கள் கைப்பேசி நம்பரை வைத்திருக்கும் எவரும் உங்களைக் கண்காணிக்க முடியும். நீங்கள் என்ன படத்தை ப்ரொபைல் படமாக வைத்திருக்கிறீர்கள், என்னென்ன ஸ்டேட்டஸ் இடுகிறீர்கள், எப்போதெல்லாம் வாட்ஸ் அப் வருகிறீர்கள் என்பதன் மூலமாக உங்களை அவர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இவற்றில் இருந்து தப்ப ஒரே வழி நீங்கள், உங்களது வாட்ஸ் அப் செட்டிங்குகளை மாற்ற வேண்டும். உங்களது கைப்பேசியில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே, உங்களது ப்ரோபைல் பற்றிய தகவல் தெரியவோ, அல்லது யாருக்குமே உங்களது ப்ரொபைல் பற்றிய தகவல் தெரியாமல் இருக்கவோ அதற்கான ஆப்ஷன்களை வாட்ஸ் அப் தருகிறது அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

முடிந்தவரையில் உங்களது புகைப்படம் மற்றும் நீங்கள் எந்தெந்த நேரங்களில் வாட்ஸ் அப் வருகிறீர்கள் என்பதை முற்றிலுமாக அனைவரிடம் இருந்தும் மறைப்பது நலம். வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதில் நிறையப் பிரச்னைகள் உள்ளது. எனவே உங்களுக்குத் தெரியாத நபர் இணையும் வாய்ப்பு உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து விலகி விடுங்கள். உங்களுக்குத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருக்கக்கூடிய குழுக்களில் மட்டுமே இணையுங்கள். ஏனெனில், வாட்ஸ் அப் குழு மூலமாக உங்களைப் பற்றிய விவரங்கள், உங்களது தொலைபேசி எண் சம்பந்தமில்லாத நபருக்கு சென்றடையும் வாய்ப்பும் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஒருதலைக்காதலில் பெண்களைப் பழிவாங்க அந்தப் பெண்ணை அவமானப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே யாரிடமும் உங்களது புகைப்படத்தைக் கண்டிப்பாகத் தராதீர்கள். வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உங்களுக்கு அளிப்பதாகக் கூறும் இணையதளங்களை நம்பி உங்களது புகைப்படங்களைக் கண்டிப்பாக இணைக்காதீர்கள்.

வாட்ஸ் அப்பில் இருப்பவர்கள் கவனத்துக்கு

வாட்ஸ் அப்பில் தினமும் பல லட்சம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. உங்களுக்கு வரும் ஒரு தகவல் உண்மையானது என 100 சதவிகிதம் தெரிந்தாலோ அல்லது பிரபல நிறுவனங்களின் இணையதளங்களில் உறுதியிட்டுக் கூறப்படும் தகவல்களை மட்டும் பரிமாறுங்கள்.
சமீபத்தில் கேன்சர் நோய்க்கான மருந்து அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானதும் அந்தத் தகவலில் 100 சதவிகிதம் உண்மையில்லை என அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மறுத்ததையும், பிரபல நடிகர், ஜனாதிபதி ஆகியோர் இறந்ததாகப் பரவிய தவறான தகவல்களையும் நினைவில் நிறுத்துங்கள்.
எனவே, உங்களுக்குச் சரியான தகவல் எனத் தெரியாத பட்சத்தில் தகவல்களைப் பரப்பாதீர்கள்.
சமூக வலைத்தளங்கள் மனிதர்களை இணைக்க உருவாக்கப்பட்டவையே தவிர, சமூக விரோதிகள் தவறாகப் பயன்படுத்த இடம் கொடுத்துவிடக்கூடாது.

- பு.விவேக் ஆனந்த்

தங்க நகை வாங்கும்போது பகீர் மோசடிகள் – அதிர்சித் தகவல்

தங்க நகை வாங்கும்போது பகீர் மோசடிகள் – அதிர்சித் தகவல்...
 

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றா ல் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல் லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால் ஐம்பதுகிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்ற னர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக் கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்ப து கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங் கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இல வசம் என்று கூறி மக்களை மேலு ம் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொ ண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.
அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தரு கிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்தி லும் இருக்குமா என்று தெரியவில்லை.
இரண்டாவது மோசடி:
சொக்கத்தங்கம் எனப்படும் தனித்தங்கத்தி ல் நகை செய்யமுடியாது. அதில் செம்புகலந் தால்தான் நகை செய்யமுடியும். ஆ யிரம் கிராம் நகை செய்ய 916கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த் து செய்யப்படும் நகை 22 காரட் என் றும் 916 KDM என்றும் சொல்லப்படு கிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்துவிட்டு 1000 கிரா மு க்கும் தங்கத்தின் விலை போடப்படு கிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடி யாக உள்ளது.
மூன்றாவது மோசடி:
தங்கத்துக்கு இன்றைய காலத் தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரு ம்பும் வகையில் தயார் செய்வத ற்கானகூலியாகும். ஐந்து பவுன் தங்கத்தில் ஒருநகை வாங்கி னால் 5 பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்கவேண் டும். அதைக் குறிப்பிட்ட நகை யாக செய்ததற்கான கூலியை யும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந் தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
ஆனால் ஐந்து பவுன் தங்கத்து க்கும் நம்மிடம் பணம் வாங்கி க் கொண்டு அதற்கான கூலியையும் நம் மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என் ற பெயரில் ஒரு தொகையையும் வாங் கிக் கொ ள்கின்றனர்.
அதாவது மேற்கண்ட நகையைச் செய்யு ம் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தை யும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பண ம் வாங்காமல் இன்னொரு அரைபவுனு க்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந் து விடுகிறார்கள்.
நகை செய்யும்போது அரை பவுன் சே தரமாகஆகி வீணாகிவிட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறை யானது தான். ஆனால் தங்கத்தில் எ துவுமே சேதாரம் ஆவது கிடையாது.
நகைசெய்யும்போதும் பட்டை தீட்டும் போ தும் தூள்களாக கீழே சிந்துபவை சேதார மாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர் கள் பயன்படுத்திக்கொள்வார்ள். இதற்கெ ல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கி க் கொள்கி ன்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காணமுடியவில் லை.
அதுபோல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார் கள். அது நியாயமானதுதான். ஆனால் நா ம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக் கிவிட்டு எடைபோட்டு அந்த எடைக்கு உள் ள பணத்தைத்தர வேண்டும். அவர்கள்
விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில் லை. அவர்கள் வாங்கும் விலை யைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மா றாக நாம் நாற்பது கிராம் நகையை விற் கச்சென்றால் அதில் கால்வாசி க்கு மேல் குறைத்துத் தான் தருவார் கள்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத் தின் மீது வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான். படித்த நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்

Saturday, October 18, 2014


அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்..


1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ...

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடல
ும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ...

- - தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்,


குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்,

சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.

கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்குவரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன''என்று வாதிட்டார்.

ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில்,

'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ என்று தீர்ப்பானது.
அதிர்ச்சியளிக்கும் உண்மை..! படியுங்கள்....!



அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு
உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..?

முடியும்..!!

20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில்
அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக
கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தோராய கணக்கு மட்டுமே,

உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல்
நடந்திருக்க வாய்ப்புண்டு..

சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே
பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது.

அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம்
அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும்
வரி செலுத்தியுள்ளோம்.

காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே
கணக்கிடப்படுகிறது.

ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி
சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு
சுங்கவரி செலுத்த வேண்டும்.

ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள்
இந்த சாவடியை கடக்கிறது,

சிறிய வாகனத்திற்கு ரூ.35ம்,

நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம்,

பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம்,

கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு
ரூ.210ம் வசூலிக்க படுகிறது.

நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.

90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.

63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.

18,90,00,000×12= 226, 80,00,000

ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.

226,80,00,000×10 = 2,268,00,00,000.

வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு
தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல்
செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.

ஒரு சாலையில் இவ்வளவு என்றால்

இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள்
கொள்ளை நடக்கிறது..?

இப்போது சொல்லுங்கள்

இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..?

இதை நாம் எதிர்க முடியாது காரணம்

தனியார் முதலீட்டை வரவேற்கும்
அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி,

தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை
அரசு வரவேற்க காரணம் புரிகிறதா.?
சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம்.
....
தீபாவளிக்கு சீனப்
பட்டாசுகளை வாங்காதீர்கள்.
சிவகாசிப்
பட்டாசுகளை மட்டுமே வாங்கி 5
இலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ
வையுங்கள்....
வெளியுறவுக் கொள்கையின்
ஒரே காரணத்தால்
இந்தியா சீனத்துப்
பொருட்களை இங்குள்ள
வியாபாரிகள் இறக்குமதி செய்ய
அனுமதி கேட்டால் அரசாங்கத்தால்
தடை சொல்ல முடியாது.
ஆகவேதான்
வடநாட்டு வியாபாரிகள் சீனாவில்
இருந்து மலிவு விலையில்
ரூ 2000
கோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து தமிழன்
தலையில் கொளுத்திப் போடப்
பார்க்கிறார்கள்.
அரசாங்கத்தால் தடை செய்ய
முடியாததை தமிழர்களாகிய நாம்
செய்வோம். சீனத்துப்
பட்டாசுகளை நீங்கள்
வாங்கவில்லை என்றால் அடுத்த
வருடம் அதை இறக்குமதி செய்ய
அந்த சுயநல வணிகர்கள்
தயங்குவார்கள். வியாபாரம்
குறையும். மெல்ல மெல்ல சீனப்
பொருட்கள்
நம்மை விட்டு விலகும்.
தமிழர்களே... விழித்தெழுங்கள்....
சீனா உங்கள் தேசமல்ல, சீனப்
பொருட்கள் உங்கள் உள்நாட்டுத்
தயாரிப்பல்ல....
சிவகாசி உங்கள் ஊர்...
சிவகாசிக்காரர்கள் நம் மக்கள்...
தமிழர்கள்.... அவர்களது பரம்பரைத்
தொழிலை நசிக்கப் பார்க்கும்
சீனாவை நாம் உள்ளே நுழைய
விடலாமா?
நீங்கள் சிவகாசிப்
பட்டாசு வாங்கவில்லை என்றாலும்
பரவாயில்லை !... ஆனால்
சீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின்
தலையிலும் தயவுசெய்து தீ
வைக்க வேண்டாம்....
அதுமட்டும் இல்லை.... ஒருவருடம்
இந்த தீபாவளிக்காக,
உங்களுக்காகவே உழைத்து,
வெடிவிபத்தில் சிக்கி சீரழிந்து,
தினம் செததுப் பிழைக்கும்
சிவகாசிப் பட்டாசுத் தொழிலில்
ஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க்
குடும்பமும்
உங்களை காலமெல்லாம்
வாழ்த்தும்.....
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம்
பகிருங்கள்...


Sunday, October 12, 2014

மூன்று குரங்குகள் அமைத்து, அதில் ஒரு குரங்கு காதுகளை மூடிக்கொண்டும், இன்னொரு குரங்கு கண்களை மூடிக் கொண்டும், மற்றொன்று வாயினை மூடியபடியும் அமைக்கப்பட்டிருக்கும்.
இவற்றின் விளக்கங்களாக, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே என்று அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் கணினி யுகத்தின் தன்மைக்கேற்ப, அதிக ஒலியைக் கேட்காதே; அதிக ஒளியைப் பார்க்காதே; துரித உணவுகளைச் சாப்பிடாதே என்றும் எடுத்துக் கொள்ளலாமே!
இதன் மூலம், காதுகளும், கண்களும், உடல்நலமும் பாதுகாக்கப் படுமல்லவா?
அன்பார்ந்த facebook நண்பர்களுக்கு // கண்டிப்பாக படித்து பகிரவும் //



சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28 நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான்,

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று.

ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும்
ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் 31 OCT 31 அக்டோபர் அன்று MOBILE DATA CONNECTION. DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம், 31 அக்டோபர் அன்று

கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது, ஆகவே 31oct internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் FORWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்,

நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
Ignore (நிறாகரிப்பு) செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். Please Share all friends

தவிர்ப்பீர் சீனப்பட்டாசுகளை! ஆதரீப்பீர் சிவகாசி பட்டாசுகளை!

தவிர்ப்பீர் சீனப்பட்டாசுகளை! ஆதரீப்பீர் சிவகாசி பட்டாசுகளை!



சிவகாசிக்கு வேட்டு வைக்கும் சீனப் பட்டாசுகள்: இந்த ஆண்டு மட்டும் ரூ.1500 கோடி வருவாய் இழப்பு;

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீனப் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் அழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசி மற்றும் அதையொட் டிய பகுதிகளில், சுமார் 780 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் மூலம் 2 லட்சத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90 சதவீதத்தை சிவகாசிதான் பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடை பெறுகிறது. ஆனால், சிவகாசியை அச்சுறுத்தும் டிராகனாக உரு வெடுத்துள்ளன சீனப் பட்டாசுகள். பொம்மைகள் மற்றும் இரும்புக் கழிவுகள் என்ற பெயரில் சீனாவி லிருந்து ஏராளமான கண்டெய் னர்களில் கள்ளத்தனமாக சீனப் பட்டாசுகள் வந்த வண்ணம் இருக் கிறது. இந்த ஆண்டு, சுமார் 2 ஆயிரம் கண்டெய்னர்கள் வர வழைக்கப்பட்டு சில்லறை விற் பனைக் கடைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அபிரூபன் கூறும்போது, ‘சீனப் பட்டாசு வருகை யால் சில்லறை வியாபாரிகள் கொள்முதல் அளவைக் குறைத்து விட்டனர். இதனால் மொத்த வியா பாரிகளும் கொள்முதல் அளவை குறைத்து கொண்டனர். இதனால் இந்த ஆண்டு 35 சதவிகிதம் பட்டாசு விற்பனை சரிந்து, சுமார் ரூ. 1,500 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.

முன்னாள் தலைவர் ஏ.பி. செல்வராஜனிடம் கேட்டபோது, ‘சீனப் பட்டாசை தடுக்க துறைமுகங் களில் அனைத்து கண்டெய்னர் களும் 100 சதவிகிதம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதைத் தாண்டி கொண்டு வரப்படும் சீனப் பட்டாசுகளை பறிமுதல் செய்து அழித்து விட்டால் அவற்றை இறக்குமதி செய்த நபருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, மீண் டும் இதுபோன்ற வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்யும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்ய வேண்டும். சீனப் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் குளோரைடு என்ற வேதிப்பொருளுக்கு நம்மூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால், இதனை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கும் அபாயமும் உள்ளது.

நாம் தரமான பட்டாசுகளை உற்பத்தி செய்தால், அதோடு சீனப் பட்டாசுகள் போட்டியிட முடியாது. பட்டாசுக்கான விலை நியாயமாக இருக்க எம்.ஆர்.பி. அச்சிடப்பட்டால் சீனப் பட்டாசுகள் நமது தயாரிப்போடு போட்டியிட முடியாது’ என்றார்.

இந்திய பட்டாசு தயாரிப்பாளர் கள் சங்க பொதுச் செயலர் கண்ணனிடம் கேட்டபோது, சீனப் பட்டாசுகளை தயாரிக்க பொட்டா ஷியம், குளோரைடு, சல்பர், சிவப்பு பாஸ்பரஸ் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. இந்த ரசாயனங்கள் வெப்பநிலை அதிகரித்தால், தானாக வெடிக்கும். குளோரைடு ஒரு கிலோ விலை ரூ. 40 முதல் ரூ. 50 வரைதான். ஆனால், சிவகாசி யில் பட்டாசு தயாரிக்க பயன் படுத்தப்படும் அலுமினிய பவுடரின் விலை ஒரு கிலோ ரூ. 450.

இதனால், குறைந்த விலையில் சீனாவில் பட்டாசுகளை தயாரித்து, இந்தியாவுக்கு கொண்டு வரு வதில் பெரிய கும்பலே ஈடுபட்டுள் ளது. சீனப் பட்டாசுகளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே கருதுகிறோம். சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை காக்க சீனப் பட்டாசு இறக்குமதியை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்றார்.

Monday, September 29, 2014

பேஸ்புக் பதிவை குறிப்பிட்ட நபர்களுக்குத் தெரியாமல் மறைக்க...

பேஸ்புக் பதிவை குறிப்பிட்ட நபர்களுக்குத் தெரியாமல் மறைக்க....




“பேஸ்புக்” என்பது இன்று இணையதளத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும்போது குறிப்பிட்ட சிலருக்கு நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து, மற்ற அனைவருக்கும் தெரியும்படி செய்வது எப்படி என்று பார்ப்போம்...

முதலில், குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின், "Public" என்பதில் “கிளிக்” செய்யுங்கள். சிலருக்கு அது "Friends" என்று இருக்கக்கூடும். வரும் "DropDown" மெனுவில் "Custom" என்பதை “கிளிக்” செய்யுங்கள். அப்போது வரும் பகுதியில் "don't share with these people or lists" என்பதில், குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு லிஸ்ட் வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம். ஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராகக் கொடுங்கள். நிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டுக்கொள்ளுங்கள். பின்னர் லிஸ்ட் பெயரை தேர்வு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது.

இது முடித்துவிட்டு “Save Changes” கொடுத்துவிட்டு Post செய்துவிட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது.

தீ விபத்து ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்:-...

தீ விபத்து ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்:-



தீ விபத்தால் ஏற்படும் சேதங்கள் ஏராளம். இதில் இருந்து உடமை, உயிர் உள்ளிட்ட அனைத்தையும் காப்பாற்ற தேவையான முதலுதவிகள் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

எங்காவது தீப்பற்றிக்கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு “101” என்ற கட்டணமில்லா எண்ணில் தகவல் தெரிவியுங்கள். எண்ணெய் மற்றும் ஆசிட்டால் ஏற்பட்ட தீவிபத்துக்களுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்கலாம். மற்ற தீ விபத்துக்களுக்கு நீரூற்றி அணைக்கலாம்.

விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால், உடனே அவரை கீழே தள்ளி கம்பளம், போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுக்கமாக சுற்றினால், தீ அணைந்துவிடும். ஆடையில் தீப்பற்றினால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். எனவே தீப்பற்றியவர், தரையில் படுத்து உருண்டு கொடுக்க வேண்டும்.

சூடான பாத்திரங்களை தொடுவதாலோ, கொதிக்கும் எண்ணைய் தெறிப்பதாலோ ஏற்படும் சிறுபுண்கள், கொப்புளங்களை கையால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால், விஷக்கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்த கொப்புளங்களின் மீது மருந்து தடவி கட்டுப்போட வேண்டும்.

தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக்கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும். கடுமையான தீக்காயங்களுக்கு அதன்மீது காற்றுப்படாமல் மூடவேண்டும். இது வலியை குறைக்கும். தீவிபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்த துணியை அகற்ற முயற்சிக்கக்கூடாது.

கொதிக்கும் நீரில் இரண்டு கரண்டி சமையல் சோடாவை கொதிக்க வைத்து அதன்பின் தண்ணீர் வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியால் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்து போனால், மீண்டும் அந்த நீரை சொட்டுச்சொட்டாக விட்டு நனைக்கலாம்.

தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்புகலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றை கொடுக்கலாம். தீக்காயங்கள் கடுமையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

~~அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய இவ்விசயத்தை படித்ததோடு நின்றுவிடாமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள்... நன்றி.

Monday, September 22, 2014

பெண்களுக்கான சிறப்பு பதிவு facebook -தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பது எப்படி ...?-...!





பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.
நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.
1. பேஸ்புக் பிளேசஸ் ( Facebook Places ): இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த: உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் ( Profile ) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.
முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் ( Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize )இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? : பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and applicationactivity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.
Error: 103
4. அப்ளிகேஷன்களுக்குத் தடா: பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.
5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites சென்று Edit your settings- ய் கிளிக் செய்யவும். இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.
6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது.https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே.
பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.

மரத்தை வெட்டினால் மனிதன் சாவான்..!

மரத்தை வெட்டினால் மனிதன் சாவான்..!

 

அரசமரத்தை வெட்டுவதோ அதன்மீது ஏறுவதோ பெரிய பாவம் என்று என்தகப்பனார் அடிக்கடி சொல்வார் எதற்காக என்று காரணம் கேட்டால் அவருக்கு சொல்ல தெரியாது. பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதை ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் பின்பற்ற வேண்டியது நமது வேலை அதைமட்டும் ஒழுங்காக செய்தால் எந்த பிரச்சனையும் வராது எனவே காரணம் கேட்காதே என்று கூறிவிடுவார். என் தகப்பனார் அப்படி சொல்வது சரியா? தவறா? என்பதை பற்றி நான் கேட்கவில்லை. உண்மையாகவே அரசமரத்தை வெட்டினால் பாவம் ஏற்படுமா? அதைமட்டும் தெளிவாக சொல்லுங்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சிவபெருமானுடைய வியர்வை துளியிலிருந்து தோன்றியது “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள் அதே போல நாராயணனின் வலது கண்ணிலிருந்து தோன்றியது அரசமரம் என்ற ஐதீகம் காலகாலமாக இருந்துவருகிறது. மற்ற மதங்களிலிருந்து இந்துமதம் சிறப்பான முறையில் தனிப்பட்டு திகழ்வதற்கு இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களுமே இறைவனின் அம்சம் அல்லது இறைவனோடு ஏதாவது ஒருவகையில் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது என்று கூறுவதில் தான் அடங்கி இருக்கிறது.
மரம் என்பது ஒற்றை அறிவுடையது அதை போய் இறைவனோடு சம்பந்தபடுத்தலாமா? இது இறைவனை இழிவுபடுத்துவதாக ஆகாதா? என்று சிலர் நினைக்கலாம். இதே மாதிரியான நினைப்புகள் மனித ஜாதியின் மனதில் எப்போது தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே இந்த உலகம் கெட்டுப்போக துவங்கிவிட்டது எனலாம். மண்ணும் கல்லும் இறைவனாகுமா? இது தவறான சென்டிமென்ட் என்று கருதியதனால் நிகழ்ந்தது என்ன?
இந்த கேள்விக்கு நல்ல பதிலை தருவது சீனநாட்டின் இப்போதைய இயற்கை நிலவரமாகும். அங்கு தெய்வத்தோடு சம்பந்தபட்டிருந்த அனைத்தும் பொதுவுடைமை பெயரால் நாட்டு வளர்ச்சி என்ற போலிக்காரணங்களால் சூறையாடப்பட்டன. அதன் விளைவாக சீனாவின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு சமப்பாடு இழந்து, இன்று அபாயகரமான நிலைக்கு வந்துவிட்டது. நமது நாடும் இப்போது ஏறக்குறைய அதே பாதையை நோக்கி மிக வேகமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது.
வேப்பமரத்தில் மாரியம்மன் இருப்பதும், வில்வமரத்தில் சிவபெருமான் இருப்பதும், துளசியில் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் கண்ணபெருமான் சிரிப்பதும், வெறும் புராணக்கதைகள் அல்ல. அதில் மிகு ஆழமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்கிறது ஆயிரம் சட்டங்கள் ஏற்படுத்தாத ஒழுங்கை ஒரு சிறிய மத நம்பிக்கை ஏற்படுத்திவிடும் என்பதை போல கடவுளோடு சம்பந்தபடுத்தபட்ட மரங்களும் அழிவிலிருந்து தப்பித்து வந்தன இன்று பகுத்தறிவு வளர்ந்து போனதனால் வாழ்க்கைக்கு தேவையான அறிவு நசிந்துகொண்டே வருகிறது.
அரசமரத்திற்கு வடமொழியில் “அஸ்வத்தா” என்றொரு பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால் நம்பிக்கையோடு வழிபடுபவர்களின் பாவங்களை போக்குபவள் என்பது பொருளாகும். தமிழில் உள்ள “திருமுட்ட புராணம்” என்ற நூல் அரசமரத்தை வெட்டுவதனால் துர்மரணம் வறுமை தீராத பிணி போன்றவைகள் ஏற்படுவதாக கூறி எச்சரிக்கை செய்கிறது.
மரங்கள் என்பது பூமியின் இடப்பரப்பை அடைத்துக்கொள்ள படைக்கப்பட்ட தேவையற்ற பொருள் அல்ல. மரம் என்பது பூமிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் மட்டுமல்ல மனிதனுக்கும் உயிர்வாழ கொடுக்கப்பட்ட கொடையும் ஆகும். அந்த மரங்களை அழித்தால் கண்டிப்பாக மனிதர்கள் அழிய வேண்டியது தான். அதனால் தான் நமது பெரியவர்கள் அரசமரத்தை வெட்டினாலும் அவமரியாதை செய்தாலும் பாவம் என்று சொன்னார்கள்.

கண் தானம் பற்றிய உண்மைகள்:-

கண் தானம் பற்றிய உண்மைகள்:-
 
தானத்தில் சிறந்தது கண் தானம்.. படிப்பறிவிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கண் தானம் செய்வதில் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கண்தானத்தை பற்றிய சில உண்மைகளையும், விளக்கங்களையும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
மனிதன் செய்யும் தானங்களில் மிகவும் சிறந்தது கண்தானம் தான். ஏனென்றால் இறந்த ஒருவரிடமிருந்து பெறப்படும் 2 கண்களால் பார்வையில்லாமல் இருக்கின்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.
கண் பார்வையின் அத்தியாவசியத்தை ஏற்படுத்திய இறைவன், அதை நாம் இழந்து விட்டால், அதை மாண்டவர் மூலம் மீண்டும் பெற வழியையும் வைத்திருக்கிறார். இந்த அற்புத வசதியை நாம் உபயோகித்து கொள்ளாவிடில் இழப்பு மனித சமுதாயத்திற்கே. இயற்கை படைப்பின் இந்த அதிசயத்தை அறிந்து மனித சமுதாய மேம்பாட்டிற்கு இதை உபயோகிப்பது மிகவும் இன்றியமையாததாகும். நம்முடைய உடல் உறுப்பு ஏதேனும் பழுதடைந்து விட்டால் அதே போன்ற வேறு உறுப்புகளை வாங்கி பொருத்திக்கொள்ள முடியாது. மறைந்தவரின் காது, மூக்கு, கை, கால், மூளை மற்றும் எதையும் வேறு யாரும் உபயோகிக்க முடியாது. ஆனால் அவரது கண்களை மட்டும்வேறு இருவருக்கு உபயோகித்துக்கொள்ள முடியும்.
கண்தானம் செய்வது மிகவும் எளிது. ஒருவர் தன் மறைவிற்கு பின்னர் தன் கண்களை தானமாக கொடுக்க விரும்பினால் அருகாமையில் உள்ள கண் வங்கியில் கண் தான விண்ணப்ப படிவத்தை வாங்கி, அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அவரது பதிவுஎண், கண் வங்கியின் விலாசம், தொலைபேசி எண், கண்தான விளக்க கையேடு போன்றவை கண் வங்கியினரால் விண்ணப்பதாரருக்கு கொடுக்கப்படும். இதனை பெற்று கொண்ட பின்னர் கண்தானம் செய்யும் தனது விருப்பத்தை நெருங்கிய உறவினரிடமும், நண்பர்களிடமும், தெரிவிக்க வேண்டும். கண் வங்கியிலிருந்து பெறப்பட்ட கண் வங்கி விலாசம், தொலைபேசி எண் கொண்ட அடையாள அட்டை எல்லோருக்கும் தெரியும்படி மாட்டிவைக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்தவர் மறைந்த உடன் உடனடியாக கண் வங்கிக்கு உறவினர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்த 6 மணி நேரத்திற்கு கண்களை தானம் செய்தால்தான் அதை பிறருக்கு பயன்படுத்த முடியும். தாமதமாக வந்து கண்களை பெறுவதில் 6 மணி நேரத்திற்குள் மேல் தாமதம் ஏற்பட்டாலோ அது பயனற்று போய்விடும்.
நீங்கள் இருக்கும இடத்தில் கண் வங்கி இல்லாவிட்டால் அருகில் உள்ள மருத்துவரிடம் உங்கள் விருப்பத்தை கூறினால் கண்தானத்திற்கான ஏற்பாட்டை அவரே செய்வார். உயிலின் மூலம் கண்தானம் செய்வதை தவிர்ப்பது நல்லது. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. கண் வங்கி மூலம் கண்தானம் செய்வதே உபயோகமானது.
கண் எனும் உறுப்பு நமக்கு இறைவன் தந்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். அதன் மூலமாகதான் இயற்கையை நம் குடும்பத்தவரை அன்பானவர்களை உலகத்தை பார்க்கிறோம். தெரிந்து கொள்கிறோம். இதனை அத்தியாவசியமாக உள்ள உறுப்பாக கண்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததல்லவா?
இனிமேலாவது நம் கண்களை நன்கு பராமரிப்போம். பாதுகாப்போம். இறந்த பின்னர் மனித உடலிலிருந்து மனிதனுக்கு பயன்படக்கூடிய கண்களை தானம் செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம்.
மண்ணுக்குள் மக்கும் கண்கள், மனிதனுக்கு பயன்படட்டும்..

Thursday, September 18, 2014

ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்....

ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்....



பலருக்கும் பிடித்தமான அசைவ உணவு பிராய்லர் சிக்கன். அது தீவனத்துக்குப் பதிலாக ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது.

இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு செல்லும் சாலை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இந்த வழியில் வரும் பங்கனப்பள்ளி, 1700-கள் வரை வைரச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரங்கள் நிஜாம் ஆண்ட ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.

1800-களின் இறுதிவரை இங்கே வைரங்கள் வெட்டப்பட்டன. அதேபோலப் பங்கனப்பள்ளி மாம்பழங்களும் கனிகளில் உயர்ந்த இடத்தைப் பெற்றன.

ஆனால், சமீபகாலமாக வியாபாரிகளின் பேராசையால் பங்கனப்பள்ளி மாம்பழங்களின் புகழுக்குப் பங்கம் ஏற்பட்டது. வேகமாகப் பழுக்க வைப்பதற்காகக் கால்சியம் கார்பைடைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த கால்சியம் கார்பைடு, பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைக்கும் வாயுவான எத்திலீனை வெளியிடும்.

இந்த கால்சியம் கார்பைடு, மனித ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பது. ஒருவழியாக அரசாங்கம் விழித்துக்கொண்டு கார்பைடு உபயோகம் குறித்து வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

என்ன வகைப் புரட்சி?

இப்போதெல்லாம், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு வரும் வழியில் வரிசைகட்டி நிற்கும் கோழிப் பண்ணைகளைப் பார்க்கமுடியும். இவை கிராம மக்கள் நடத்தும் கோழிப் பண்ணைகள் அல்ல. பெரிய தொழில் நிறுவனங்களால் நடத்தப்படும் சிக்கன் தொழிற்சாலைகள் இவை. இதைப் போன்ற பண்ணைகளின் வாயிலாகத்தான் கோழி, முட்டைப் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டது.

பசுமை, வெண்மைப் புரட்சிக்குச் சமமான மாற்றம் இது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தியது, உணவுடன் ஊட்டச்சத்தை வழங்குவதற்கான பாராட்டத்தக்க யோசனை.

ஆனால், அதில் ஒரு ஆபத்தும் உள்ளது. மாம்பழத்தைப் பழுக்கவைக்க கார்பைடைப் பயன்படுத்துவதைப் போல, பாலை அதிகம் சுரக்கவைக்க ஆக்சிடோசின் ஹார்மோனை மாடுகளுக்குச் செலுத்துவதைப் போல, வர்த்தகரீதியாக உற்பத்தி செய்யப்படும் கோழிகளிலும் ஆரோக்கியக் குறைபாடுகள் நிறைய உள்ளன.

அதிர்ச்சி முடிவுகள்

கோழிகள் வேகமாக வளர்வதற்காகவும், முட்டை பொரிக்கும்போது தொற்று நோய்களைத் தடுப்பதற்காகவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அவற்றின் உடலில் செலுத்தப்படுகின்றன. பிரபலமான சிக்கன் கம்பெனிகளான வெங்கிஸ், வெட்லைன் இந்தியா, ஸ்கைலாக் ஹேட்சரிஸ் ஆகியவை கோழிகளுக்குக் குறைந்த உணவைத் தந்து அதிக வளர்ச்சியைப் பெறுவதற்காக ஆன்ட்டிபயாட்டிக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன.

சுற்றுச்சூழல் அறிவியல் இதழான டவுன் டு எர்த், இந்தியாவின் வெவ்வேறு சந்தைகளில் விற்கப்படும் கோழி இறைச்சியைத் தனது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதித்து வெளியிட்டிருக்கும் முடிவுகள் அதிர்ச்சி தருபவை. கோழி ஈரல், தசைகள், சிறுநீரகங்களில் டெட்ராசைக்ளின் (டாக்சிசைக்ளின் போன்றவை), புளூரோகுயினலோன்ஸ், அமினோகிளைகோசைட்ஸ் ஆகியவை படிந்திருக்கின்றன.

ஏன் ஆபத்து?

இந்த மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் எந்த மருந்தாலும் எதிர்க்க முடியாத பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் உள்ள கோழிகளைச் சாப்பிடும் மனிதர்களுக்கும் இவை நேரடியாகக் கடத்தப்படும். வளர்சிதை மாற்றம் அடையாத பாக்டீரியாக்கள் இறைச்சியில் இருந்தால், வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களைத் தாக்கும். கோழிப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகள், மனிதப் பயன்பாட்டுக்கான வீரியத்தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தப்படாத பாகங்கள்

நாம் வாங்கும் கோழியில் பயன்படுத்தாமல் தூக்கி எறியும் பாகங்கள் என்ன ஆகின்றன? மேலே சொன்ன ஆபத்தான பாக்டீரியாக்கள் அவற்றின் சிறகுகள், எலும்புகளில் இருக்கும். அவை மண், நிலத்தடி நீர், நீர்நிலைகளில் கலக்கும். இதன்மூலம் இந்த பாக்டீரி யாக்கள் சுற்றுச்சூழல் முழுவதும் பரவும் ஆபத்து உருவாகிறது.

பரிந்துரைகள்

கோழிப் பண்ணைத் தொழிலில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக டவுன் டு எர்த் இதழில் டாக்டர் சந்திர பூஷன் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார்.

1. கோழிகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக்குகளைத் தடை செய்ய வேண்டும்.

2. கோழித் தீவனத்தில் ஆன்ட்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. தொழிற் பாதுகாப்பு கழகத்தின் (பி.எஸ்.ஐ.) ஒழுங்கு விதிகளைக் கடுமையாக்க வேண்டும்.

3. மனிதப் பயன்பாட்டுக்கான ஆன்ட்டிபயாடிக்குகளைக் கோழிகளுக்குப் பயன்படுத்து வதைத் தடுக்க வேண்டும்.

4. ஆன்ட்டிபயாடிக்குகளைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை விலங்கு மருத்துவர் களுக்கு அளிக்க வேண்டும்.

5. கோழிப் பண்ணைகளி லிருந்து சுற்றுச்சூழலுக்குக் கடத்தப்படும் பாக்டீரியாக்கள், ஆன்ட்டிபயாடிக்குகளால் ஏற்படும் மாசுபாட்டின் அடிப்படையில், மாசுபாட்டு அளவீடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.

6. ஆன்ட்டிபயாடிக்குகளுக்கு மாற்றாகக் கோழிகளின் வளர்ச்சிக்கு உதவும் மூலிகை ஊட்டப்பொருட்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.

7. மனிதர்கள், விலங்குகள், உணவு சங்கிலித் தொடரில் ஆன்ட்டிபயாடிக்குகளை எதிர்க்கும் மண்டலங்கள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில், நுண்ணுயிர்கள் வேகமாகத் திடீர் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியவை. ஒரு நிமிட நேரத்தில் பல தலைமுறை வளர்ச்சியை எட்டிவிடக்கூடியவை இந்த பாக்டீரியாக்கள். அதனால் புதிய புதிய எதிர்ப்புத்தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் வளர்ந்து பெரும் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பு அதிகம்.

அச்சுறுத்தும் கோழிகள்

# இந்தியாவில் பிறந்து ஒரு மாதத்துக்குள் இரண்டு லட்சம் குழந்தைகள் இறந்து போகின்றன. இதில் மூன்றில் ஒரு குழந்தை ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தியால் (Antibiotic Resistance) இறக்கிறது.

# காசநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் 15 சதவீதம் பேருக்கு ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி இருக்கிறது.

# இந்த ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்திக்கு நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று டெல்லி சி.எஸ்.இ. அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

# பிராய்லர் கோழிகளுக்கு ஆண்டிபயாட்டிக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் அவை வேகமாகவும் கொழுகொழுவென்றும் வளர்கின்றன.

# ஆண்டிபயாட்டிக் கொடுக்கப்பட்ட கோழியைச் சாப்பிடுவதன் மூலம், நம் உடலிலும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி ஏற்படலாம். அந்த நிலையில் நமக்கு நோய் வந்து ஆண்டிபயாட்டிக் மருந்து உட்கொண்டால், உடல் குணாமாகாமல் போக நேரிடலாம்.

# ஏனென்றால், கோழியைச் சமைத்து சாப்பிட்டாலும்கூட, அதிலிருக்கும் ஆண்டிபயாட்டிக் முற்றிலும் அழிவதில்லை.

# அத்துடன், கோழியின் உடலில் இருக்கும் ஆண்டிபயாட்டிக் எதிர்ப்புசக்தி பெற்ற பாக்டீரியா நமது உடலுக்குப் பரவக்கூடும்.



 சுபா ஆனந்தி 

Saturday, August 2, 2014

கண் தானம் செய்வது எப்படி?

கண் தானம் செய்வது எப்படி?


1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.
3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?
நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.
கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:
1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.
2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.
3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.
4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.
5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.
6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.
7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.
- எனவே , கண் தானம் செய்வோம்...!!! Please, donate your Eyes.

Tuesday, July 22, 2014

தயவுசெய்து குடித்து விட்டு காரோட்டாதீர்கள்....

பொம்மை - ஒரு நெஞ்சுருகும் நிகழ்வு....

 

பெரிய கடைத்தெருவில் ஏதோ சாமான் வாங்க போயிருந்தேன். ஒரு கடையில் ஒரு ஐந்தாறு வயது மதிக்கத்தக்க சிறுபையனிடம் அந்தக் கடையின் கேஷியர் விவாதம் செய்து கொண்டிருந்தார். 'இந்த பொம்மையை வாங்குவதற்கு உன்னிடம் உள்ள காசு போதாது தம்பீ.'

அந்தப் பையன் என் பக்கம் திரும்பி 'என்னிடம் இருக்கும் இந்தக் காசுகள் நிச்சயம் பத்தாதா மாமா?' என்று கேட்டான். நான் அந்தக் காசுகளை வாங்கி எண்ணிப் பார்த்துவிட்டு, 'இது அந்த பொம்மை வாங்க பத்தாதய்யா' என்றேன். ஆனாலும் அந்தப் பையன் பொம்மையை கீழே வைக்கவில்லை.

நான் அந்தப்பையன் அருகில் சென்று 'நீ இந்த பொம்மையை யாருக்காக வாங்கப் போகிறாய்?' என்று கேட்டேன். 'இந்த பொம்மையை என் தங்கை மிகவும் விரும்பி தனக்காகக் கேட்டாள். நான் இதை அவள் பிறந்த நாளுக்காக பரிசளிக்கப் போகிறேன்' என்றான். 'நான் இதை என் மம்மியிடம் கொடுத்து விடுவேன். என் மம்மி என் தங்கையிடம் போகும்போது கொடுத்து விடுவார்கள்' என்றான். அதைச் சொல்லும்போது அவன் கண்களில் அப்படியொரு சோகம். 'என் தங்கை கடவுளிடம் போய் விட்டாள். எங்க டாடி சொன்னாங்க எங்கம்மாவும் சீக்கிரம் கடவுளிடம் போயிடுவாங்களாம். அதனால்தான் மம்மியிடம் கொடுத்தால் என் தங்கையிடம் கொடுத்திருவார்கள்' என்றான்.

என் இதயம் செயலிழந்து விட்டதைப்போல் உணர்ந்தேன். அந்தப் பையன் என்னைப் பார்த்து 'எங்க டாடியிடம் மம்மியை நான் கடைக்கு போயிட்டு வருவதற்குள் போக வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்' என்றான்.
அந்தப் பையன் அழகாய் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றையும் காட்டினான். 'என் தங்கை என்னை மறக்காமல் இருக்க மம்மியிடம் இந்த போட்டோவையும் கொடுத்தனுப்பப் போகிறேன். எனக்கு மம்மியை ரொம்ப பிடிக்கும் அவர்கள் என்னை விட்டுவிட்டு போகக்கூடாது என்றுதான் நான் சொல்கிறேன். ஆனால் டாடிதான் என் தங்கையுடன் இருப்பதற்காக அவர்கள் போகப் போவதாக சொல்கிறார்' என்று சொல்லிவிட்டு அந்த பொம்மையை அமைதியாக சோகத்துடன் பார்த்தான்.

நான் உடனே என் பர்சை எடுத்துக் கொண்டு, 'அப்படியானால் நாம் இன்னொரு தடவை உன்னோட பணம் போதுமா என்று எண்ணிப் பார்ப்போமா?' என்றேன். 'ஓகே! இந்த பணம் போதுமேன்றுதான் நினைக்கிறேன்' என்றான். அவனுக்குத் தெரியாமல் என் காசுகளை அதில் கலந்து விட்டு எண்ணினேன். பொம்மைக்குப் போக மீதமும் இருந்தது. அவனிடம் சொன்னேன்.

'என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கச் செய்த கடவுளுக்கு நன்றி' என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 'நான் நேற்று படுக்கப் போவதற்கு முன், என் தங்கைக்கு இந்த பொம்மை வாங்கி அனுப்ப போதுமான பணம் என்னிடம் இருக்கச் செய் என கடவுளிடம் கேட்டு விட்டுத்தான் படுத்தேன். அதுதான் கொடுத்திருக்கிறார்' என்றான்.
'எங்க மம்மிக்கு ஒயிட் ரோஸ் ரொம்ப பிடிக்கும் அதனால் அவர்களுக்கு ஒரு ஒயிட் ரோஸ் வாங்கித் தரனும் என்று அப்போதே நினைத்தேன். ஆனால் கடவுளிடம் ரொம்ப கேட்க வேணாமே என்று விட்டுட்டேன். ஆனால் கடவுள் அதற்கும் சேர்த்தே செய்து விட்டார்' என்றான்.

கடையிலிருந்து வெளியேறும்போது என் நிலைமையே வேறாக இருந்தது. அந்த சிறுபையன் என் மனதிலேயே இருந்தான்.

அதன் பின்தான் இரண்டு நாள் முன்னே நான் உள்ளூர் செய்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு குடிகார டிரைவர் ஓட்டி வந்த ட்ரக், இளம் பெண்ணும் அவளுடைய பெண் குழந்தையும் பயணித்த காரின் மீது மோதிய விபத்தில் பெண் குழந்தை நிகழ்விடத்திலேயே இறந்து விட்டதோடு, அந்த இளம்பெண் கோமாவில் இருக்கிறாள் என்ற செய்தி. ஒருவேளை அந்த சிறுவன் இந்த இளம் பெண்ணின் மகனாய் இருக்குமோ?

சிறுவனை சந்தித்ததன் பின், இரண்டு நாள் கழித்து, அந்த இளம்பெண் இறந்து விட்டாள் என்று செய்தி வெளியாகி இருந்தது. உடனே கொஞ்சம் ஒய்ட் ரோஸ் வாங்கிக் கொண்டு உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அந்த இளம் பெண்ணின் உடல் சவப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்தது. அதன் கையில் அழகான வெள்ளை ரோஜா அந்த சிறுவனின் போட்டோவுடன். அதன் மார்புக்கு மேல் அந்த பொம்மை வைக்கப் பட்டிருந்தது. மிகவும் கனத்த மனதுடன் கண்ணீருடன் என் வாழ்வே மாறிப் போன உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன்.

அந்த சிறுவனையும், அவன் தன் தாயின் மீதும் தன் தங்கையின் மீதும் கொண்டிருந்த அன்பும் என்னால் எப்போதும் மறக்க இயலாதது. ஒரு கண நேரத்தில் ஒரு குடிகார காரோட்டியால் அவையாவும் பறிக்கப்பட்டு விட்டது.

தயவுசெய்து குடித்து விட்டு காரோட்டாதீர்கள்.
(இந்நிகழ்வு ஆங்கிலத்தில் எங்கிருந்தோ படித்தது)சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை
போதை மருந்துகள்,
மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு !!!