Saturday, September 28, 2013

ஏன் யோகாசனம் செய்யவேண்டும்

ஏன் யோகாசனம் செய்யவேண்டும்.../

 இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டார்கள். "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.

மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும். ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.

நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசாகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்படி எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.

உலகில் எண்ணிலடங்கா ஆசனங்கள் உள்ளன. இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள் முழுவதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

No comments:

Post a Comment