Tuesday, September 3, 2013

சத்தியமா கதை புதுசுங்க
ஆளில்லாத ஊர்ல ராஜா ராணி இல்லாத ராஜகுமாரி
தூரில்லாத குடத்த எடுத்துகிட்டு கரையிலாத குலத்துக்கு தண்ணிக்கு போனாளாம் அங்க தலையில்லாத மான் வேரில்லாத பில்லை மேஞ்சுகிட்டு இருந்தது அதை கண்ணில்லாதவன் பார்த்து காது இல்லதவன்கிட்ட சொன்னானாம் அவன் நரம்பில்லாத அம்பெடுத்து மான் மேல விட்டானாம் அது மான் மேல படாம மான் வயித்திளிருந்த குட்டி மேல பட்டு குட்டி செத்துபோயிருசாம் குட்டிய சமைச்சு சாப்டுட்டு தோல கால் இல்லாத பந்தல்ல காய போட்டனாம் அத தலை இல்லாத பருந்து தொக்கிகிட்டு போயிருச்சாம் அத காலிலாதவன் துரத்திக்கிட்டு போனானாம் அப்போ அவன் காலில் குத்துன கண்டங்கதிரிக்க முல்லு தலைவலியா வந்துருச்சாம் அத காட்ட வைதியருகிட்ட போனானாம் இது சரியாகனும்னா ஆலவேறு அரசவேறு புங்கவேறு பூவரசவேறு எல்லாத்தையும் நுனியோட புடிங்கி அம்மி படாம அரச்சு நாக்கு படாம நக்குடா இது முதல் வைத்தியம் கண்டங்கதிரிக்க வேற கை படாம புடிங்கி உரல குப்புற போட்டு உலக்க படாம குத்தி பின்னங்கையல எடுத்து நக்குடா இது ரெண்டாவது வைத்தியம்னு சொன்னாராம் இப்படிப்பட்ட வைத்தியருக்கு எதாவது சன்மானம் தரணும்னு சொல்லி அடி இல்லாத பட்டி எடுத்து ஓட்ட சாக்குல ஒன்பது முழ உளுந்தழந்து சக்கரம் இல்லாத வண்டியில பாரம் ஏத்தி மாட்டு வண்டி ஓட்ட குருடன் பாதை காட்ட வண்டி போய்கிட்டே இருந்துச்சாம்

No comments:

Post a Comment