Friday, September 13, 2013

முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.

கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.

போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.

பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 
இங்கிலீஷு மீடியத்தில் படித்த தானாகீனாவுக்கு இண்டர்வியூவில் எழுத்துத் தேர்வு. கேள்வி இதுதான். திருவள்ளுவர் பற்றி 5 விஷயங்கள் எழுதுக.
தானாகீனாவோ பள்ளிகூடத்துல தமிழே படிக்கலை. என்ன செய்வான்..? இருந்தும் எப்படி எழுதானான்னு பார்க்கலாமா......

1. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

2. திருக்குறள் திருவள்ளுவரால் தான் எழுதப்பட்டது.

3. வள்ளுவர் எழுதியது தான் குறள்.

4. குறளை எழுதியது வள்ளுவர் தான்.

இது நாலை எழுதிட்டு பத்து நிமிஷமா வெயிட் பண்ணவனுக்கு எதுவும் தோணலை...ரொம்ப ரொம்ப யோசிச்சவன் டக்குன்னு முகம் மலர்ந்து ஐஞ்சாவது விஷயத்தை எழுதி டக்குன்னு பேப்பரை நீட்டினான்..அதென்ன 5ஆவது பாயிண்ட்..?
*
*
*
*
*
5.திருவள்ளுவர் ஒரு தமிழ்நாடு பஸ் கம்பெனி ஓனரும் கூட.;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

ஒருவரை முதல் முறை சந்தித்து,
அவர் வாய் திறவாதிருந்தால்.....

அவரை "அறிவு மிகுந்தவர்" என்று எண்ணுவேன்.

இரண்டாம் முறையும் சந்தித்து பேசாதிருந்தால்...
அவரை....

"ரொம்பவும் எச்சரிக்கையானவர்" என்று எண்ணுவேன்.

ஆனால்,
மூன்றாம் முறையும் சந்தித்து பேசாமலிருந்தால்...
அவரை.....

"முட்டாள்" அல்லது "ஊமை" என்று சந்தேகிப்பேன்"

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
சென்னையில் பலத்த மழை #

சன் டிவி : சென்னையில் கடும் மழை , மக்கள் அவதி, ஸ்டாலின் கண்டனம்

ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை ..மக்கள் மகிழ்ச்சி...

கலைஞர் டிவி : ( பொதுமக்களில் ஒருவர் ) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க!! "

கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால் , சென்னை சாலைகளில் கடும் வெள்ளம்

வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தி யின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம்

பொதிகை டிவி : (ரமணன் ) நாளை சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காண படும் ..சில இடங்களில் மிதமான மழையும் , ஒரு சில இடங்களில் பலத்த மழையும் , ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய கூடும்.''''''''''''''

............................................................................................................................................................
 

No comments:

Post a Comment