Monday, September 30, 2013

மூன்று மாதங்களுக்கு முன்பு ஈஸி சேர் மாடலில் இருக்கும் ரெண்டு பிளாஸ்டிக் சேர் வாங்கினேன். என்னுடைய ரெண்டு குழந்தைகளுக்கும் ஆளாளுக்கு ஒன்று என பாகம் பிரித்து அடையாளம் தெரிய ஒன்று லைட் கலர்....மற்றொன்று டார்க் கலரில் வாங்கினேன்.

ரெண்டு மாதம் கழித்து சின்ன பையனின் சேர் கைபிடியின் இணைப்பு பக்கம் உடைந்து விட்டது. சரி எதற்கும் கேட்டு பார்க்கலாம் என்று சேர் வாங்கிய சேரை கடைகாரரிடம் எடுத்து சென்று உடைந்து விட்டதை சொன்னேன்

அவரும் தெரிந்தவர் ஆதலால் சேர மாற்ற முடியாவிட்டாலும் பழக்கத்திற்காக கம்பனியிடம் கேட்டு மாற்றி தருவதாக சொல்லி 20 நாட்களில் மிக சொற்ப பணத்தை பெற்று கொண்டு மாற்றி கொடுத்து விட்டார்.

அவரிடம் இப்படி உடைந்து விட்டது என்று கேட்ட போது அவர் சொன்னார் சேர்களை ஒன்றின் மேல் ஒன்றாக தான் அடுக்கி வைப்பார்கள் அதுவும் கடைக்கு வெளியே தான் வைப்பார்கள் அப்போது லைட் கலர் சேர் தான் மேலே வைப்பார்கள் ஏனெறால் டார்க் கலர் வெயிலில் வெளுத்து விடும். நான் வாங்கிய லைட் கலர் சேர் தான் உடைந்து போனது.

நீதி : டார்க் கலரை ஒதுக்க கூடாது. chair ஆனாலும்.... பிகர் ஆனாலும்.

No comments:

Post a Comment