Friday, March 28, 2014

நாமாக
முன்வந்து நமது
கண்களைத் தானமாக
கொடுக்க
விரும்பினால்,
அருகில் உள்ள கண்
வங்கியில்
பதிவு செய்து, அந்த
விபரத்தை வீட்டில்
உள்ளவர்களிடம்
தெரிவித்துவிட்டு,கண்
வங்கி பற்றிய
விபரங்களை
நிரந்தரமாக வீட்டில்
மற்றவர்கள் கண்ணில்
படும் இடத்தில்
வைத்திருக்க
வேண்டும்.

மிக
முக்கியமான,
சாத்தியமான
மற்றொன்று, நமக்குத்
தெரிந்து நண்பர்கள்
அல்லது உறவினர்கள்
வீட்டில் மரணம் நிகழும்
போது,
இறந்தவர்களின்
கண்களை தானமாக
கொடுக்க
ஊக்குவிப்பது...

மரணம் நிகழ்ந்த வீட்டில்
முடிவெடுக்கும்
நபரை அணுகி, கண்
தானம் பற்றிய
முக்கியத்துவத்தை
எடுத்துச் சொல்லி,
எப்படியாவது
அவர்களை
ஒப்புக்கொள்ள
வைக்க வேண்டும்.

இதில் அவர்கள் என்ன
சொல்வார்களோ என்று கவலைப்பட
ஒன்றுமேயில்லை.

ஒன்று சரி அல்லது
இல்லையென்று
சொல்வார்கள்
அவ்வளவே,
வேறு எந்த நஷ்டமும்
இல்லவே இல்லை.

ஒரு வேளை நாம்
கேட்காமல் போனால்
நிச்சயம் கண்கள் தானம்
செய்ய
வாய்ப்பில்லாமல் சில மணி நேரங்களில் அந்த
கண்கள்
அழிந்து போகலாம்,
ஒருவேளை நாம்
கேட்டதால் அவர்கள்
ஒப்புக் கொண்டால்
கண்கள் தானமாக
பெற்று அதன் மூலம்
இரண்டு நபர்களுக்கு
பார்வையளிக்க
முடியும்.

கண்களை தானம் அளிக்க
அந்த குடும்பம்
ஒப்புக்கொண்டால்,
உடனடியாக அருகில்
உள்ள கண்
வங்கி அல்லது அரிமா சங்க
(லயன்ஸ் கிளப்)
அல்லது ஏதாவது ஒரு
சேவைச் சங்க
உறுப்பினர்களை
அணுகினால் அவர்கள்
நிச்சயம்
கண்களை தானமாக
எடுத்துச்
சென்று விடுவர்.

கண்களை எடுத்து
இன்னொரு நபருக்கு
பொருத்துவது
என்பது
முழுக் கண்களையும்
பொருத்துவதில்லை.

கண்ணில் இருக்கும்
விழித்திரை (Cornea
மட்டுமே எடுத்துப்
பொருத்தப்
படுகிறது.

இதுபோல்
பார்வையில்லாமல்
விழித்திரை வேண்டி
காத்திருப்போர்
ஒவ்வொரு ஆண்டும்
சுமார் 840000 பேர்
இருக்கிறார்கள்
ஆனால், கண் தானம்
மூலம் அவர்கள்
தேவையை வெறும்
பத்து சதவிகிதமே
பூர்த்தி
செய்யப்படுகிறது.

தற்சமயம்
ஒருவரிடமிருந்து இருந்து
எடுக்கப்படும்
இரண்டு கண்கள்,
இரண்டு பார்வையற்ற
நபர்களுக்குப்
பொருத்தப்படுகிறது.


யார் யார் கண்
தானம்
செய்யலாம்?

கண் தானம் செய்ய
வயது வரம்பு
தடையில்லை.
எந்த
வயதானாலும்
எடுக்கலாம்.

சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம், கண்
புரை அறுவை
சிகிச்சை
செய்தவர்கள்
ஆகியோரின்
கண்களை தானமாக
எடுக்கலாம்.

கண்களை இறந்த 6
மணி நேரத்திற்குள்
எடுக்க வேண்டும்.
இறந்த பின் கண்கள் மேல்
ஈரமான பஞ்சு அல்லது
துணியால்
மூடி வைக்கவும்,
இறந்தவர்
உடலுக்கு மேலாக
காற்றாடி (ஃபேன்)
ஓடாமல்
பார்த்துக்கொள்ளவும்.

கண்களை எடுக்க பத்து
நிமிடங்கள்தான்
தேவைப்படும்.
கண்களை எடுத்த பின்
முகத்தில் எந்த
மாறுபாடும்
தெரியாது.


யார் கண்களை எடுக்க
முடியாது?


விஷக்கடி, விஷம்,
புற்றுநோய், மஞ்சள்
காமாலை, எய்ட்ஸ்
நோயால் இறந்தவர்கள்
கண்களை மட்டும்
தானமாகப்
பெறுவதில்லை.

யாரோ ஆங்காங்கே
செய்யும்
தியாகங்களில்தான் உலகம்
வளம்பெறுகிறது...

மரணம்
என்பது தவிர்க்க
முடியாது, எனினும்
ஒரு மரணம்
இரண்டு பார்வையற்ற
நபர்களின் வாழ்வில்
ஒளியேற்றி
வைக்கிறது அந்த
ஒளியேற்றும்
புண்ணிய காரியம் நம்
கைகளில்
மட்டுமே உள்ளது.

இனியொரு மரணம்
நிகழுமாயின், கண்
தானம் நம் முன்
பிரதானமாய்
நிற்கட்டும்.
____________

No comments:

Post a Comment