Saturday, March 29, 2014

இதயம்....


 
 * ஆரோக்கியமான நீடித்த ஆயுளைப் பெற இதயம் தொடர்ந்து சீராக இயங்க வேண்டும். அதற்கு இதயத்தைப் பாதுகாத்துக்கொள்வது மிக அவசியம். இதயத்தைப் பற்றிய சில முக்கியத் தகவல்கள்:
* கருப்பையில் கரு உருவாகும்போது, முதலில் உருவாகும் உறுப்பு இதயம். இதயத் துடிப்பும் ஆரம்பமாகிறது. இது பெரிதாகும்போது, நான்கு அறைகளாகப் பிரிகிறது. வளர்ந்த ஒருவரின் இதயம் சராசரியாக 5 அங்குல நீளம், 3 ½ அங்குல அகலம் இருக்கும்.
* மனித உடலின் தசைகளிலேயே மிக உறுதியானது இதயத் தசை. இதயத் தசைகள் பல ஆயிரக்கணக்கான தசைநார்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், அவை அனைத்தும் இணைந்து ஒரே தசைநாரைப் போலவே வேலை செய்கின்றன.
*இதயம் சீராக ஒரு நாளைக்கு 1,00,000 முறைக்கு மேல் துடிக்கிறது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 முறை, ஒரு மணிக்கு 4,200 தடவை துடிக்கிறது. இப்படியாக 24 மணி நேரத்தில் 1,00,800 தடவை துடிக்கின்றன.
* இதயம் ஒரு நாளில் மனித உடலில் இருக்கும் சுமார் 60,000 மைல் நீள அளவுள்ள ரத்த நாளங்களில் 7,200 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் வீதம், ஒரு மணி நேரத்தில் 300 லிட்டரைச் செலுத்துகிறது. 24 மணி நேரத்தில் இது 7,200 லிட்டராகிறது.
*ஒரு நிமிடத்துக்குச் சுமார் 5 லிட்டர் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்கிறது. அதாவது ஒரு நாளைக்குச் சுமார் ஒரு லட்சம் தடவை.
* ஒருவர் வேலை செய்யாமல் இளைப்பாறும்போதும் இதயம் ஒரு நிமிடத்துக்கு 45 முதல் 80 முறை வரை ஒரே சீராகத் துடிக்கிறது. ஆனால், பளுவைத் தூக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ, ஒரு நிமிடத்துக்கு 4 மடங்கு அதிகமான ரத்தத்தைச் செலுத்துகிறது.
* ஒரு மனிதனின் சராசரி 70 வயது வாழ்க்கையில், இதயம் கிட்டத்தட்ட 25 கோடி முறை சுருங்கி விரிகிறது.

No comments:

Post a Comment