இன்று உலக சிட்டுக்குருவி தினம்:..
இன்று உலக சிட்டுக்குருவி தினமாகும், ..
பறவை இன்ங்களில் மிகச் சிறிதாகவும், அனைவரையும் கவரும் வகையில் கீச் கீச் எனக் கூக்குரலிடுவது சிட்டுக்குருவியாகும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சீட்டுக்குருவிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் தற்போது பெருகிவிட்ட நகரமயமாக்கலாலும், வயல் வெளிகள் வீட்டு மனைகளாக்கப்பட்டு விட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரைதேடுமிடங்கள் சுருங்கி விட்டன.
செல்போன் கோபுரங்கள் தற்போது தகவல் தொழில்நுட்ப சாதனமான செல்போன்கள் பெருகி விட்ட நிலையில் நகரங்கள் மட்டும் இல்லாது கிராமப்புறங்களிலும் செல்போன் கோபுரங்கள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் இனம் தொடர்ந்து அழியும் நிலை உருவாகி உள்ளது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகளை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றாக அரசு வகைப்படுத்தி உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 20-ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இம்முயற்சியை தொடங்கி உள்ளன. இதன் மூலம் சிட்டுக் குருவிகள் மற்றும் அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் உலக சிட்டுக்குருவி தினம் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

No comments:
Post a Comment