Wednesday, March 26, 2014

ஸ்கிப்பிங் பண்ணுங்க!..

ஸ்கிப்பிங் பண்ணுங்க!
10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது,- 30 நிமிடம் ஜாகிங் செய்வதற்குச் சமம்.
ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால், உடலை ஃபிட்&ஆக வைத்துக்கொள்ள முடியும்.
தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்ததும் 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
ஜாகிங்கைவிட ஸ்கிப்பிங்கில் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.
குழந்தைகள் அனைவரும் தவறாமல் வீட்டிலேயே செய்ய வேண்டிய ஓர் எளிமையான பயிற்சி. குழந்தைகள் நன்கு உயரமாக வளரவும் இந்தப் பயிற்சி உதவுகிறது.
எப்போது செய்யவேண்டும்?
இதற்கென குறிப்பிட்ட நேரம் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் செய்வதால், சுத்தமான காற்றும் இயற்கையான சூழலும் டென்ஷன் இல்லாத அமைதியும் உடலுக்கு இன்னும் ஆரோக்கியத்தைத் தரும்.
யாரெல்லாம் செய்யக் கூடாது?
பெரியவர்கள், மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்னை உள்ளவர்கள், கயறைத் தாண்டிக் குதிக்க முடியாது என்பதால், அவர்கள் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
கர்ப்பிணிகள் செய்யவே கூடாது.
வயதான பெண்கள் மற்றும் தொப்பையுள்ள பெண்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது கவனம் தேவை.
பெண்கள் தாண்டிக் குதிக்கும்போது, கர்ப்பப்பை கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தாலும்கூட மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.
எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?
ஸ்கிப்பிங் விளையாடும்போது, வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஏதாவது சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டும்.
வயிறு நிறையச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட உடனே ஸ்கிப்பிங் செய்யக் கூடாது.
குளுகோஸ் அதிகம் உள்ள வாழைப்பழம், மாவுச்சத்து குறைவாக உள்ள கோதுமை பிரெட் இதில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.
டாக்டரின் ஆலோசனைப்படி கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு உள்ள உணவுப் பொருள்களை சரிவிகித்தில் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment