Wednesday, March 19, 2014

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்(Custard Apple Clinical characteristics) ...


சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்(Custard Apple Clinical characteristics) ...

1. சீத்தாப்பழத்தை உட்கொண்டால் செரிமானம் ஏற்படும்.

2. சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் புசி வர பிளவை பருக்கள் பழுத்து உடையும்.

3. சீதாபழ இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.

4. சீதாபழ விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

8. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.

9. சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது,பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலமாகும்.

No comments:

Post a Comment