Psychic Powers:
இது ஆப்ரகாம் லிங்கனுக்கு வந்த கனவு.
உங்களில் பலரும் இதை கேள்வி பட்டு இருப்பீர். ஆப்ரகாம் லிங்கன் தனது முடிவை கனவின் மூலம் கண்டார்.
இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு Ward Hill Lamon என்ற நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கையில் தனது கனவை பற்றி கூறினார்.
அவர் கூறியது "
பத்து நாட்களுக்கு முன்பு மிகவும் தாமதமாக ஓய்வு எடுக்க சென்றேன். மிகுந்த களைப்பின் காரணமாய் உடனே உறங்கி விட்டேன். சிறுது நேரத்தில் கனவில் காண தொடங்கினேன்.
\\ * அங்கே மரண அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன். பலர் அழுது கொண்டிருந்தனர்.
பின்பு மெத்தையை விட்டு கீழ்த்தளத்தில் வந்து அலைந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்.
அதே உருக்கமான அழுகையால் அங்கிருந்த அமைதி உடைந்தது.
ஆனால் அழுபவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் இருந்தனர். நான் ஒவ்வொரு அறையாக சென்றேன்.
எங்கும் யாருமே தென்படவில்லை.
ஆனால் அதே துன்பத்தின் ஓசை நான் கடந்தபோது என்னை சந்தித்தது.
அனைத்தும் அறைகளிலும் விளக்கெரிவதை பார்த்தேன்.எல்லா பொருட்களும் பழக்கப்பட்டவையாக இருந்தன.
ஆனால் இதயங்கள் உடைந்துவிடும் அளவுக்கு அழுது கொண்டிருக்கும் மக்கள் எங்கே? எனக்கு புதிராகவும் திகைக்க வைப்பதாகவும் இருந்தது.
இவை அனைத்திற்கும் என்ன அர்த்தம்? இந்த சூழ்நிலையின் காரணத்தை கண்டுபிடிக்க உறுதியாய் இருந்தேன்.அவை மர்மமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
கிழக்குப் பக்க அறைக்கு செல்லும் வரை அப்படிதான் இருந்தது. அங்கே ஒரு வருந்தத்தக்க ஆச்சர்யத்தை சந்தித்தேன்.
எனக்கு முன்னாள் ஒரு பாடை (சவப்பெட்டியை ஏற்றிசெல்லும் வண்டி) இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடையணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது.
சுற்றிலும் படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர்.
பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. "வெள்ளை மாளிகையில் இறந்தது யார்?" என படை வீரர்களுள் ஒருவனிடம் கேட்டேன்.அவன்
"ஜனாதிபதி", "அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்" என்றான்.
பின்பு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை
ஏற்பட்டது. * //
நான் விழித்துக் கொண்டேன்.
அதன் பின்பு அந்த இரவு நான் தூங்கவில்லை.அது வெறும் கனவுதான் என்றபோதிலும் எப்போதும் என்னை வித்தியாசமாக நச்சரித்தது." - என்பதாகும் .
இந்த கனவு கண்டு இரண்டாவது வாரம் , ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி John Wilkes Booth என்பவனால் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார் .
அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக
வெள்ளை மாளிகையின் கிழக்குப் பக்க
அறையில் கிடத்தப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment