Wednesday, March 26, 2014

காக்பிட்’ எனப்படும் கருப்பு பெட்டி..


‘காக்பிட்’ எனப்படும் கருப்பு பெட்டி.
விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள்.
இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும். பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும் பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக இருப்பது கருப்புப் பெட்டியாகும். விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம் ( ATR ) என்பதே கருப்புப் பெட்டி என அழைக்கப் படுகிறது. இந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது. மேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப் பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
இதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், எஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
‘கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில்இருக்கும்.
ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.
பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.
சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்.
விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும்.
இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.
2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.
1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.
கடலில் பல மைல் ஆழத்தில் விழுந்தாலும் பாதிக்காது.
இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.
பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். 1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். இருப்பினும் அவரது கண்டுபிடிப்பின் முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்ற பங்காக கருதப்படுகிறது.
விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான். 1960 – ம் ஆண்டில் அது அமலுக்கு வந்த்து. கருப்புப் பெட்டி என அழைத்தாலும் அதன் உண்மையான நிறம் ஆரஞ்சு என்பது குறிப்பிட்த்தக்கது. விபத்துக்கு பிறகு எளிதாக அடையாளம் காண்பதற்காக அந்த பெட்டியின் மீது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயின்ட் அடிக்கிறார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர். மேலும், சாலை விபத்துகளைக் கண்டறிவதற்குக் கூட, வாகனங்களில் அப்பெட்டி பொருத்தப்படுகிறது.

No comments:

Post a Comment