Thursday, February 20, 2014

தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'


"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்......

சமீபத்தில், தனியார் நிறுவனத்தினர், எளிதாக வாசிக்கும் வகையில், 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும், பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆ#வில், முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு....

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை வரலாற்றில் கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்; பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம். இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட தமிழ்மொழி இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்.. தமிழ் மக்கள் வீட்டில்.. தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.

No comments:

Post a Comment