Showing posts with label தாய்மொழி. Show all posts
Showing posts with label தாய்மொழி. Show all posts

Saturday, May 31, 2014

தமிழ் எங்கள் உயிர் - தமிழின் சிறப்புகள்:-

தமிழ் எங்கள் உயிர் - தமிழின் சிறப்புகள்:-


மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள். வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி...

தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு மொழிகளில் கிடையாது.

தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை. வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை – உதாரணம் : வயிற்றிலிருந்து கத்தும் ஹிந்தி எழுத்துக்கள் (ஜ், ஹா, gha, kha) போன்றவை கிடையாது. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும். (ஆனால் இந்த வயிற்றிலிருந்து கத்தும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என குறைகூறும் மூடர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.)

பேசுவதும், எழுதுவதும், வாக்கியங்களும், வார்த்தைகளும், சொற்களும் ஒன்றேதான். ஒவ்வொரு சொல்லாய்ச் சொன்னாலும் அர்த்தம் மாறுவதில்லை. அம்மா – ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் அ-ம்-மா மாற்றமில்லை. MOTHER ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் எம் – ஓ – டி - ஹச் - ஈ - ஆர். இப்படி பேசினால் புரியுமா?

பழங்கால மொழிகளான சீனம், எகிப்து, லத்தீன், பாலி (புத்தரின் போதனைகள் பாலியில்தான் உள்ளது), சமஸ்கிருதம் ஆகியவை இப்போது உலகில் வழக்குமுறை/பேச்சுமுறையில் இல்லை. 19ம் நூற்றாண்டுடன் பழைய சீன மொழி அழிந்துவிட்டது. இப்போது சீனா முழுவதும் பேசப்படும் மொழியாக மாண்டரின் உள்ளது. பழங்கால மொழிகளில் இன்னும் மாறாமல் (இலக்கண இலக்கியங்களில்) அப்படியே இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மட்டுமே.....

Thursday, February 20, 2014

நம்மொழியாம் தமிழ்மொழி அது எம் தாய்மொழி வாழ்க தமிழ்..இன்றும் என்றும்!


நம்மொழியாம் தமிழ்மொழி அது எம் தாய்மொழி வாழ்க தமிழ்..இன்றும் என்றும்!

இன்று உலக தாய்மொழி தினம்...

அனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது...

எப்படி உருவானது:
----------------------------
இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில் "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர். 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

ஒருவொருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் மொழி அவசியம். உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது. உலகில் பல வகையான மொழிகள் உள்ளன. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுö னஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

மூன்று மொழி :தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும், மொழிகளுக்காக சண்டைகள் கூடாது என மொழி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது. "ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.

அனைவருக்கும்
தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க.

தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'


"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்......

சமீபத்தில், தனியார் நிறுவனத்தினர், எளிதாக வாசிக்கும் வகையில், 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும், பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆ#வில், முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு....

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை வரலாற்றில் கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்; பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம். இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட தமிழ்மொழி இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்.. தமிழ் மக்கள் வீட்டில்.. தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்......

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்......

தாய் மொழியை போற்றும் அனைவருக்கும் உலகத் தாய் மொழி தின வாழ்த்துகள். அந்நிய மொழியின் தாக்கத்தில் இருந்து நம் தாய் மொழியை காப்போம் . தாய் மொழியில் பெயர் சூட்டுவோம் தாய் மொழியில் கலப்பின்றி பேசுவோம். தாய் மொழியில் கையெழுத்து போடுவோம். உயிரினும் மேலாக தாய் மொழியை நேசிப்போம். இந்திய நாட்டின் மொழித் தீண்டாமை கொள்கையை மாற்றி அமைத்து நம் தாய் மொழியை பேணுவோம் என்று இந்நாளில் சூளுரைப்போம்...

செந்தமிழ் நாடென்ற போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..

அனைவருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க.

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை.....

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை:

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.
மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு.

அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான். உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல்வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும். நமது அடையாளமே தமிழ்மொழி தான். மென்மையான உறவுகளைச் சொல்வது, தகுதியான சொல்லை வெளியிட முடிவது, தாய்மொழியில் தான். மூத்தோரிடம் இருந்து உடம்புக்குள், உயிருக்குள் ஊறிவரும் விஷயம் தாய்மொழியே. தாய்மொழியில் சிந்திப்பவர்களே, என க.ஞானசம்பந்தன் பேராசிரியர், (தியாகராஜர் கல்லூரி, மதுரை) கூறுகிறார்....

:தாய்மொழி தெரியாவிட்டால் எந்த மொழி படித்தாலும், புரியாது. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும்.

கருவில் கற்கும் மொழி :
---------------------------------

தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை, குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார், மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

அவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது, தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள், வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ, அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே, குழந்தைகளால்
கற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின், மூன்றரை வயதுக்கு மேல், இரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.
தமிழ்மொழியில் நிறைய சப்தங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு உச்சரிப்பு வேறுபாட்டை நாக்கை சுழற்றுவதன் மூலம், கற்றுத் தருவது எளிது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கு தமிழ் மொழியே உதவும். வாயின் எல்லாப் பகுதிகளையும் நாக்கு தொட்டு, மடங்கிப் பேசமுடிவது, தமிழ்மொழியில் தான். பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும்.வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் தாய்மொழியில் தான் பேசவேண்டும். அப்போது தான் குழந்தை எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்ளும். வீட்டில் பல மொழிகள் பேசினால், மூன்று வயது வரை, மொழி வளர்ச்சி இல்லாமல், பேச்சு மொழி தாமதப்படும். ஒரே மொழியில் பேசும் போது, பழகும் போது மொழி வளர்ச்சி வேகமாக, தெளிவாக இருக்கும்...

நம்மொழியாம் தமிழ்மொழி அது எம் தாய்மொழி வாழ்க தமிழ்..இன்றும் என்றும்!

அனைவருக்கும்
தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க.