Monday, June 23, 2014

புதிர்கள்..

புதிர்கள்...



1.அய்ந்து குதிரைகள் 5 மூட்டை ஓட்சைச் சாப்பிட 5 நிமிட நேரம் எடுத்துக்கொண்டன என்றால், நூறு குதிரைகள் நூறு மூட்டை ஓட்சைச் சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும் ?



விடைகள்...



அய்ந்து குதிரைகள் அய்ந்து மூட்டை ஓட்சை அய்ந்து நிமிடங்களில் சாப்பிட முடியுமானால், ஒவ்வொரு குதிரைக்கும் ஒரு மூட்டை ஓட்சை சாப்பிட அய்ந்து நிமிடங்கள் வேண்டும். ஆகவே, நூறு குதிரைகளுக்கும் நூறு மூட்டை ஓட்சை சாப்பிட வெறும் அய்ந்து நிமிடங்களே போதும்.



2.
ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய கூடையில் போட்டன. அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது, அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?


விடை


பெட்டிகளில் போடப்பட்ட ஒவ்வொரு கொட்டையின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நிமிட முடிவிலும் இரட்டிப்பாகுமென்றால், பெட்டி அரை அளவு நிரம்ப 9 நிமிடங்களாகும். பிறகு அடுத்த ஒரு நிமிடத்தில் பெட்டியின் அடுத்த அரைப் பகுதியும் நிரம்பிவிடும்.


3.
ஒரு மனிதன் ஒரு நாள் குதிரை பந்தயம் நடக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு உள்ள குதிரைகளினதும் மனிதர்களினதும் தலைகளின் எண்ணிக்கை 74 உம் கால்களின் எண்ணிக்கை 196 உம் ஆகும். அங்கு உள்ள குதிரைகளினதும் மனிதர்களினதும் எண்ணிக்கை யாது.


விடை


50 மனிதன் 24 குதிரை








 

No comments:

Post a Comment