கடிகாரம்
ஆரம்ப காலங்களில் சூரியனின் நிழலை வைத்தே நேரத்தை கணக் கிட்டார்கள்.
இதற்காக சூரிய வட்டு என்ற பெயரில் ஒரு கடிகாரம் அமைத்து இருந்தனர். இதில்
தகடு ஒன்றில் ஜினாமான் என்று அழைக்கப்பட்ட முக்கோண வடிவில் ஒரு தகடு
பொருத்தப்பட்டு இருக்கும். சூரியனின் ஒளி இந்த தகடில் விழும்போது
முக்கோணத்தின் நிழல் தெரியும். இந்த நிழல் விழும் இடத்தை பொருத்து நேரத்தை
கணக்கிட்டார்கள். கிழக்கில் இருந்து மேற்கு திசை நோக்கி சூரியன் நகரும்
போது சூரிய தகடில் விழும் நிழல் இடது புறத்தில் இருந்து வலது புறம் நோக்கி
நகரும். இந்த அடிப்படை காரணமாகவே கடிகாரங்களில் நேரம் காட்டும் முட்கள்
இடமிருந்து வலமாக நகரும் வகையில் அமைக் கப்பட்டன. இந்த சூரிய தகடு
தத்துவத்தின் அடிப் படையில் தான் ஐரோப்பாவில் முதலில் கடிகாரம்
உருவாக்கப்பட்டது. இதனால் தான் நேரம் காட்டும் கடிகார முட்கள் இடம் இருந்து
வலமாக நகருகின்றன.
No comments:
Post a Comment