Monday, June 23, 2014

விடுகதைகள்

விடுகதைகள்


1. தலையைச் சீவினேன்
தாகம் தீர்ந்தது. - அது என்ன?

2. தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி-அது என்ன?

3. தேடாமல் கிடைப்பது
தேடும் செல்வத்தைக் குறைப்பது. - அது என்ன?

4. நான் ஏறும் குதிரை, நாலு கால் குதிரை
அந்தக் குதிரைக்கு ஆயிரம் கண்கள். - அது என்ன?

5. டாக்டர் வந்தார் கோட்டைக் கழற்றினார்
கேணிக்குள் குதித்தார். - அது என்ன?

6. தளதள மேனிக் கெம்புக்கல்
தவழ்ந்து செல்லும் கெம்புக்கல்
நீரில் மிதக்கும் கெம்புக்கல்
நித்திரை கெடுக்கும் கெம்புக்கல். - அது என்ன?

7. வளைந்த தங்கக் கம்பி
வானத்திலே போட்ட கம்பி
எடுக்க வராத கம்பி
எட்டிப் பிடிக்க முடியாத கம்பி. - அது என்ன?

8. விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம்
மடக்கினால் எனக்குள் அவன் அடக்கம். - அது என்ன?

9. நீல நிறத் தோட்டத்திலே
மஞ்சள் பூ பூத்திருக்கு. - அது என்ன?

10. தண்ணீரும் மழையும் இல்லாமல்
பயிர் பச்சையாய் இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல்
வாய் சிவப்பாய் இருக்கிறது. - அது என்ன?



 விடுகதை விடைகள்

1.இளநீர்

2.கண்

3.சோம்பல்

4.கட்டில்

5.வாழைப்பழம்

6.மூட்டைப்பூச்சி

7.மின்னல்

8.குடை

9.பௌர்ணமி நிலா

10.கிளி


No comments:

Post a Comment