இதயநலம் காக்கும் உடற்பயிற்சிகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களை கூறுங்கள் என்றால் அந்தப்பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும்.
உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. பல நோய்களில் இருந்து நம்மை காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன.
இதயத்திற்கு ஏற்ற உடற்பயிற்சிகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (aerobic exercises) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்கு தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும்.
பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி, மெல்லோட்டம், சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்

No comments:
Post a Comment