Friday, September 13, 2013

இன்னைக்கு காலைல My dad, news paper படிச்சிக்கிட்டே
" விலைவாசி லாம் கூடிகிட்டே போகுதே"னு புலம்பிகிட்டே இருந்தாரு..
அப்போ அவர்ட்ட நான் சொன்னேன்,
" இப்டி புலம்பரதால எதும் மாறாது. போராடனும். புரட்சி பண்ணணும்.
எங்க பாரத்தாலும் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு.
இதற்குலாம் என்ன காரணம்??
அநியாயத்தை தட்டிகேட்க எவனாச்சும் வரமாட்டானா?னு தான் நினைக்குறோமே தவிர, நாம தட்டிகேட்கிறது இல்ல.
இப்படி இருந்தா இந்தியாவை யார்தான் காப்பாத்துவா?னு சங்கர் பட சிவாஜி மாதிரி கேட்டேன்...
உடனே,
" முதல்ல வேலைவெட்டிக்கு போயி, உன்ன நீ காப்பாத்திக்கடா"னு சொல்லிட்டாரு என் பிதாஜி...
# ஒருவேள வீட்ட விட்டு துரத்திருவாங்களோ???


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு... அவரு நாலு பிச்சைகாரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா?? தப்பா...??
மாணவன் : சரி தான் டீச்சர்...
டீச்சர் : எப்படி ??
மாணவன் : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல.. டீச்சர்...
டீச்சர் : ??

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"


,;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்..??
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??
11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்….

No comments:

Post a Comment