Sunday, September 1, 2013

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு:-

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்
கோவில் அமைப்பு:-
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்
கோவில், மற்ற பழைய
கோவில்களை போல சிற்ப
வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட
அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த
கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள்
கொண்டதாகவோ அமையவில்லை.
அந்த ஆலயம் மிகச்சிறிய
ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின்
அருளாட்சி வரையறுக்க முடியாத
எல்லையாக பரவியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட
மக்கள் சாதி, மத
வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம்
போல வழிபடுகின்றனர். அவர்கள்
உலகின் எந்த மூலையில்
இருந்தாலும் குலசை முத்தாரம்மனின்
நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை.
இத்தகைய சிறப்புடைய
முத்தாரம்மை குலசையில்
ஒரு தெருவில் நடுநாயகமாக
வீற்றிருக்கிறாள். அவள் அருள்
செய்யும் கருவறை சிறிய அறையாக
உள்ளது.
கர்ப்பக்கிரகத்தினை அடுத்து அர்த்த
மண்டபமும்,
அதனையடுத்து மகாமண்டபமும்
அமைந்துள்ளன. இந்த
மகாமண்டபத்தின் வலதுபுறம்
பேச்சியம்மனும், இடது புறம்
கருப்பசாமியும் அருள்
பாலிக்கின்றனர். பைரவர்
தெற்குமுகமாக
மகாசன்னதியை எதிர்நோக்கி காட்சி தருகிறார்.
அடுத்து கொடி மர மண்டபம் உள்ளது.
இதன் நடுவில் 32 அடி உயரக்
கொடிமரம் செப்புத் தகடுகளால்
அமைக்கப்பட்டு கம்பீரமாக
உயர்ந்து நிற்கிறது. இதன் அடிப்புற
செப்புத் தகட்டின் வடப்பக்கத்தில்
அம்பாளும், சுவாமியும் அருள்
பாலிக்கின்றனர். தென்பக்கத்தில்
அஸ்திர தேவரும், கீழ்ப்பாக்கத்தில்
விநாயகரும், மேற்கில்
பாலசுப்பிரமணியரும்
காட்சி அளிக்கின்றனர்.
கொடிமர மண்டபத்தின்
கன்னிமூலையில் மகா வல்லப
விநாயகர்
கிழக்கு நோக்கி அமைந்துள்ளார்.
தென்புறம்
நோக்கி இரு பூதத்தார்களும்
உள்ளனர். இக்கோயிலுடன்
இணைந்து அருள்மிகு சிதம்பரேஸ்வரர்
ஆலயம், விண்ணவரம் பெருமாள்
திருக்கோயிலும் அமையப்
பெற்றுள்ளன.

No comments:

Post a Comment