Friday, September 13, 2013

ரொமான்டிக் கதை :
நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்!
அவளும் ரேஷன் எடுக்க வந்திருந்தாள் , நானும் ரேஷன் எடுக்கவே போயிருந்தேன் .
-ஒற்றுமை நெம்பர் 01
நான் அவளை ரெண்டாவது அவளும்
சாமிகும்பிட வந்திருந்தாள், நானும்
சாமி கும்பிடவே போயிருந்தேன் .
- ஒற்றுமை நெம்பர் 02
மூன்றாவது தடவை பார்த்தது லைப்ரெரியில் நான் புக் எடுக்க போயிருந்தேன்!
என்ன ஆச்சரியம்? அவளும் புக் எடுக்கவே வந்திருந்திருந்தாள் .
-ஒற்றுமை நெம்பர் 03
இப்படி, கடைத்தெரு, பீச், மார்கெட், பேங் என எங்கும், நான் எதுக்கு போகிறேனோ அவளும் அதே காரணத்துக்காக வந்தாள்!
எங்கள் ரெண்டுபேருக்கும் இடையில் இப்படி ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதை ஆச்சரியப்பட்டேன் !
அவளும் ஆச்சரியப்பட்டாள் !
நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒத்துமையா இருக்கலாம்னு எனக்கும் - அவளுக்கும்
தோணிச்சுது!!
அவளாக வந்து காதலை சொல்லட்டும்னு ' நான் நினைத்தேன்!
அவளும் ' அவராக
வந்து காதலை சொல்லட்டும் ' என
நினைத்துவிட்டாள் !
இதனால் ரெண்டு பேரோட லவ்வும் ரொம்ப நாளா சொல்லப்படாமல் இருந்திச்சு!
ஒருநாள் போனாப் போகுதுன்னு, நானே வலியப்போய் " மாலினி ஐ லவ் யூ " என்றேன்!
அதுக்கு அவள் " என்பேரு ஜீவமாலினி! என்னோட பேர்ல பாதிதான் உனக்கு தெரியுமா ?
அப்டீன்னா உன்னோட லவ்வும் பாதிதானா? " என்று மொக்கை போட்டாள் .
அதை நான் தாங்கிகிட்டேன்! ( எல்லாம் சுயநலம்தான் )
ஆமா நீ என்ன வேலை பார்க்குறேனு கேட்டாள் .
நான் வெட்டியாக இருந்ததை வெளிப்படையாக சொன்னேன் .
" அக்கா தங்கச்சி? "
" மூணு பேரு " "
அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா? "
" இன்னும் இல்லை " "
ஓகே ரெண்டு மாசம் கழிச்சு பதில் சொல்லுறேன் "
அவள் கிளம்பிவிட்டாள்
!
எனக்கோ ரெண்டு மாசம் ரெண்டு வருஷமா போனது .
ஆனா அடுத்த, ஒரு வாரத்திலேயே அவள் என்னை முகமலர்ச்சியோடு பார்க்க வந்தாள்!
இந்தக்கதையின் தொடர்ச்சியை என்னால் சொல்ல முடியாது!
காரணம், நான் படிச்ச பேப்பர் துண்டில் இவ்வளவும் தான் இருந்திச்சு! பின்ன ஐம்பது பைசாவுக்கு வாங்கினா முழுப்பேப்பர்லயா கொடுப்பான் .
இத்துனூண்டு சின்ன தாள்ல தான் கொடுப்பான் . . .
நீதி : சுண்டல் வாங்கும் போது கொஞ்சம் அதிகமாவே வாங்குங்க . . .

No comments:

Post a Comment