மருந்துக் கடைகளின் விதிமுறைகள்
ஒவ்வொரு மாதமும் குடும்பத்தில் பட்ஜெட் போடும்போதும் தவறாமல் எழுதுவது மெடிக்கல் ஷாப் ரூ . 500 என்று அவரவர் வசதிக்கு ஏற்ப , வருமானத்திற்கு ஏற்ப குறிப்பிடுவார்கள். அதில் முக்கியமாக குழந்தைகளுக்கு சத்து மருந்து , ஜலதோஷத்திற்கான மருந்து,பெரியவர்களுக்கு அஜீரணக் கோளாறு மாத்திரை,மருத்துவர் தொடர்ந்து அருந்தச் சொல்லும் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரை,புற்றுநோய் உள்ளவர்களுக்கான மாத்திரை,சிறுவர்கள் திடீரென்று கீழே விழுந்தாலோ , அடிபட்டாலோ அவர்களுக்கு டெட்டால்,பிளாஸ்திரி,பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலிநிவாரணி மாத்திரை, கர்ப்பிணிகளுக்கான இரும்புச் சத்து,வைட்டமின் மாத்திரைகள், திருமணம் ஆனவர்கள் கம்பீரத்துடனும், திருமணம் ஆகாதவர்கள் பயத்துடனும் கேட்க வேண்டியதைத் தலைகீழாகக் கேட்டு வாங்கும் ஆணுறை என பட்டியல் நீண்டு கொண்டே போனாலும்,என்ன இது மருந்து மாத்திரை வாங்கியே சம்பளம் கட்டுப்படி ஆகாது என்று புலம்பினாலும் மருந்துக் கடைகளைத் தவிர்க்க முடியாத நிலைமையில்தான் நாம் வாழ்கிறோம்.
இப்படி நம் குடும்பத்தில் ஒன்றாகிவிட்ட மருந்து கடைகளுக்கு விதிமுறைகள் என்னென்ன உள்ளதன என்று நமக்குத் தெரியுமா?
எந்த ஒரு வர்த்தகம் செய்தாலும் மத்திய அரசாங்கத்தின் பதிவுடனும் அனுமதியுடனும் செயல்படுவதே நியாயமான தொழிலாகும் அதுபோலவே ஒரு மருந்துக் கடை வைக்க வேண்டும் என்றால்
1 . மத்திய அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும். உதாரணத்திற்கு ரேவதி மெடிக்கல்ஸ் என்றால் அந்தக் கடையின் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும்
2 . அந்தக் கடையின் உரிமையாளர் பெயரில் drug licence இருக்க வேண்டும்.
3 . மருந்துக் கடையின் பரப்பளவு 110 சதுர அடியாக இருக்க வேண்டும்.
4 . முக்கியமாக மருந்துக் கடையும் குளிரூட்டப்பட்டிருக்க வேண்டும் (airconditioner ) மற்றும், குளிர்சாதனப் பெட்டி இருக்க வேண்டும் ( refrigerator ) ஏன் தெரியுமா? குறிப்பிட்ட மருந்துகள் எப்போதும் சீரான சீதோஷ்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உங்கள் வீட்டில் இருக்கும் எந்த ஒரு மருந்து பாட்டிலையும் எடுத்துப் பாருங்கள். அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்- ( store in cool place ) என்று.
குளிர்சாதன பெட்டியின் அவசியம் ஏன் தெரியுமா ‘தசாவதாரம்’ படத்தில் கமல் படம் முழுவதும் சொல்வாரே இந்த வாயல் ரொம்ப குளிராகவும் இருக்கக் கூடாது ரொம்ப சூடாகவும் கூடாது அதனால ஒரு குளிர்சாதன பெட்டிவேண்டும் என்று அதேதான் எல்லா சொட்டு மருந்துகளும், தடுப்பூசிகளும் பாதுகாக்கப் பட வேண்டியது குளிர்சாதன பேட்டியில் தான். அப்படி சீரான சீதோஷ்ணத்தில் இல்லாத தடுப்பூசி போட்டு எத்தனை வருங்கால மருத்துவர்கள் இறந்துள்ளார்கள் தெரியுமா, வேதனை தான் மிஞ்சுகிறது.
5 . மருந்துக் கடையில் குறைந்தது 3 பேர் வேலை பார்க்க வேண்டும் அதில் ஒருவர் மருந்தகளைப் பற்றிய பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அதாவது B.pharm , D.pharm படித்திருக்க வேண்டும். இந்த படிப்பை முடித்தவர் மாதம் ஒரு முறை சுகாதாரத் துறை அதிகாரியின் முன்னால் கையெழுத்து இட வேண்டும். நான் இந்தக் கடையில் தான் பனி புரிகிறேன் என்று. ஆனால் எந்த சட்டத்தையும் மிஞ்சி,அழித்து, நாசப்படுத்தி, கேலி ஆக்குவது தானே நமது வேலை.இந்தப் படிப்புகளை முடித்தவர்களிடம் பேசி அவர்களின் சான்றிதழை மட்டும் வாங்கிக் கொண்டு மாததா மாதம் ரூ. 500 கொடுத்து விடுவார்கள். அவ்வளவே.
6 . மருந்துக் கடைகளில் நமக்கு முன்னால் மருந்துகள் கொட்டிக் கிடக்கும் அப்படி இருக்கவே கூடாது. எப்படி சவுக்கி கடைகளில் பட்டுப்புடவை, காட்டன் புடவை இருக்கின்றதோ அதே போல் ஒவ்வொரு மருந்துகளும் தனித்தனியாக பிரித்து வைத்திருக்க வேண்டும். அதாவது schedule H drug என்பது போல்.
7 . மிக முக்கியமாக மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் எந்த மருந்தும் விநியோகிக்கக் கூடாது.
மேலே கூறிய அத்தனை விதிமுறைகளையும் எந்த ஒரு மருந்துக் கடையும் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. இதை அனைத்தையும் சோதனை செய்ய வேண்டிய சுகாதாரத்துறை, மருந்துக் கட்டுபாட்டு துறை,காவல் துறை,ஒரு மண்ணாங்ககட்டி துறையும் சோதனைக்கு வருவது இல்லை. மாதா மாதம் சுபயோக போஜனம்,மது ,மாது என அனைத்தும் போனால் அந்த அதிகாரிகள் எதற்கு சோதனை இட வர வேண்டும்.
நாமும் இதைப் படித்த பின்பு பெருசா என்ன செய்யப் போறோம்? பழையபடி அவனிடமே ஏமாறப் போகிறோம். அவ்வளவு தான்.
நன்றி: உயிரோசை

No comments:
Post a Comment