Sunday, November 16, 2014

சமநிலைப்பாடு!
`````````````````````````````




* உன்னை பாராட்டுகின்றனர்
என கர்வம் கொள்ளாதே...
நாளை உன்னை
மதிக்காமலும் இருப்பர்!

* இன்று அலட்சியம் செய்வதால்
மனம் வெம்பி போகாதே...
நாளை உன்னை
பாராட்டி மெச்சுவர்!

* அன்பாக இருப்பதாக
அப்படியே நம்பி விடாதே...
நாளை உன்னை
வெறுத்தும் பேசுவர்!

* துரோகத்தை கண்டு
துயரம் கொள்ளாதே...
நாளை உன்னிடம்
மன்னிப்பு கேட்பர்!

* உச்சபட்ச மகிழ்ச்சியென
உற்சாகக் கூச்சலிடாதே...
நாளை உனக்கதுவே
வருத்தமாய் மாறி விடும்!

* துன்பம் வந்ததென
துவண்டு போகாதே...
நாளை உனக்கதுவே
வெற்றியாய் மாறி விடும்!

* வசதி வந்து விட்டதென
ஆட்டம் போடாதே...
நாளை உனக்கு
பணமே பாரமாகும்!

* ஏழ்மையை எண்ணி நீ
தாழ்மை உணராதே...
நாளை நீயும்
செல்வந்தர் ஆகிடலாம்!

* இன்பமோ, துன்பமோ,
ஏற்றமோ, தாழ்வோ,
அன்போ, துரோகமோ,
வசதியோ, ஏழ்மையோ

* இரண்டையும்
ஒன்றாகப் பார்!

* ஒருபோதும்
வாழ்வின் பிடித்தம்
வற்றிப் போகாது
உன் கையை விட்டு வெற்றி
விட்டுப் போகாது!
இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு...
தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..
வாக்கிங்
போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..
உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..
கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..
மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..
ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..
இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம
ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம் வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம
இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம
ATM - Anju Time Mattum
(அஞ்சு டைம் மட்டும்)
குழந்தைங்க நம்மகிட்ட
கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..
கிணத்த
தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!! இப்ப
கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண
போட்டு மெத்திருப்பானுகளோ!! # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!
காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறயில் கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்க
ு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..
ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # விதி
பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான் போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா
தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1
கேமரா 4
மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
# அப்டியே நெட் கட்டணத்தயும் உயர்த்தகூடாதுன்
னு உத்தரவு போட்ருங்கயா....

சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....


சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....

》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்
》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்
》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்
》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்
》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்
》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்
》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்
》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)
》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்
》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம்
》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்... இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!

திருநெல்வேலி......

திருநெல்வேலி.....


தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில்வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே. சென்னையின்பெருமைக்கு காரணம் நாங்களே,தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும்,கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும்நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமானதூத்துக்குடியை சார்ந்தவர்களே,தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம்நெல்லை தான்...எனவே எங்கள்தேவை எங்களாலே பூர்த்தி செய்ய படுகிறது,தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும்ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராககண்டிப்பாக இருப்பர்,இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில்தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் தமிழர்இருந்தால் அவர்நெல்லையை சேர்ந்தவராகவே இருப்பார், FamiliarIndustriallistsfrom Nellai areT V Sundram Iyengar ( TVS Group ), SAnatharamakrishnan ( Amalgamations Group),Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCLTechnologies ),AD Padmasingh Issac ( Chairman & MD, Aachi MasalaGroup ), V G Paneer Das ( Founder, VGP Group), MG Muthu ( Founder, MGM Group ),Dr.SivanthiAdhiththanar ( Dina thanthi daily ).தமிழ்நாட்டில் உள்ள ஒரேஒரு வற்றாத்ஜீவநதி எங்கள் தாமிரபரணி தான்...தென் இந்திய 8ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி எங்கள்தாமிரபரணி தான். எங்கள் தாமிரபரணி தான்நெல்லை, மற்றும் சகோதர' மாவட்டங்களானதூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியின் தாகம்தீர்க்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில்பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில்கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி எங்கள்தாமிரபரணி தாய் தான்,தமிழ்நாட்டின் அழகான தைரியமான பெண்கள்என்றால் எங்கள் நெல்லை,தூத்துக்குடி சகோதரிகள் தான்...சான்று:தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25%பேர் எங்கள் சகோதரிகள் தான். பெண்கள் அதிகமாககைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில்நெல்லை முதலிடம்,தமிழக புவியியல் அமைப்பில் கடல்,மலை,காடு,வயல்,பாலைவனம் என அனைத்தும் உள்ளஒரே மாவட்டம் எங்கள் நெல்லை தான்.எனவே நெல்லையை குட்டி தமிழ்நாடு என்று கூடசொல்லாம். ஏனென்றால் நெல்லையின் சில ஊர்கள்ஊட்டி, கொடைக்கானல் போலவும், சில ஊர்கள்ராமநாதபுரம் போலவும், சில ஊர்கள் தஞ்சாவூர்போலவும், சில ஊர்கள் நாகப்பட்டினம் போலவும்,சில ஊர்கள் அதிக காடுகள் கொண்டஈரோடு போலவும் இருக்கிறது.இப்படி ஒரு புவியியல் அமைப்பு உலகில் எந்தநிலப்பரப்பிலும்இல்லை,தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம்வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில்செல்லலாம். உதரணமாக சென்னை செல்லவேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம்.கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி வேலூர்வழியாக திருச்சி யை தொடாமலே போகலாம்.இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில்அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல்செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம்செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில்நுழையாமல் செல்லவேமுடியாது,தமிழில் எங்கள் நெல்லை தமிழ்க்கு இணை எங்கள்நெல்லை தமிழ் தான்... "ஏலே, சவுக்கியமா ஏலே"திருநெல்வேலி,தூத்துக்குடி என நிர்வாக ரீதியாகபிரிந்து இருந்தாலும் எங்கள் இரு மாவட்டமக்களுக்கும் பின்னி பிணைந்து வாழ்கிறோம்.தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாகஇதுவரை எந்த இரு மாவட்டங்களும் இருக்கவாய்ப்பு கிடைக்கவும் இல்லை. இனிமேல்இருக்கபோவதும் இல்லை,ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில்நாங்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெருவோம்.சென்னை,கோவை.திருச்சி.மற்றும் மதுரை யை விட. முதல்முன்று இடங்களில் நெல்லை பிராந்தியபள்ளி மாணவர்கள் இல்லாமல்இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2முடிவுகள்,பாண்டிய மன்னர்களின் முற்கால தலை நகரம்நெல்லை தான்..இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில்தண்ணீர் இருக்கும் இடங்கள்என்று ஒன்று இருக்குமானால்அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டும்தான்,உலக சுகாதார நிறுவனம் கணக்கு படி,இந்தியாவில் வாழ தகுதியானநகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டின்இருந்து தேர்வு செய்யப்பட்டஇரண்டு மாவட்டத்தில்ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி.பூலித்தேவன்,கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை.பாரதியார்,சுப்பிரமணிய சிவா, வீர பாண்டியகட்டபொம்மன், வாஞ்சிநாதன், வீரன்அழகுமுத்துகோன்,மார்ஷால்நேசமணி, தோழர் ஜீவா, வீரமாமுனிவர்,முஹமது இஸ்மாயில், சுந்தரலிங்கம் போன்ற பலசுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த புண்ணியபூமி..தமிழ்நாட்டில் அதிக சுதந்திர போராட்டவீரர்கள் பிறந்த பூமி எங்கள் நெல்லை.கர்ம வீரர்காமராஜர் விருதுநகரில் பிறந்திருந்தாலும்அவருக்கு நெல்லை,தூத்துக்குடி மற்றும்குமரி மக்கள் மீது அன்பு அதிகம்.நெல்லைகார்களின்அன்புக்கும்எல்லை கிடையாது. கோபத்திற்கும்எல்லை கிடையாது.இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யுட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம்..மதச்சார்பின்மைக்கு சான்று நங்கள் தான்.நெல்லையில் கோவில்கள் அருகில்மசூதி யை பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச்யை பார்க்கலாம்..தமிழ்நாட்டில் இதுவரையில் மதகலவரங்கள்நடைபெறாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று.Tirunelveli Medical College( govt ) TMC, Govt Collegeof Engg Tirunelveli, Tirunelvili Law College, Govtagricultural college, Govt Siddha Medical College,Govt Veterinary College, என தமிழ்நாட்டின்உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை....தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும்பசங்க நெல்லை பசங்க தான். பெண்கள் தொடர்பானகுற்றச்சாட்டுக்கள் குறைவாக பதிவாகும்மாவட்டங்களில் நெல்லை மற்றும்தூத்துக்குடி முதலிடம். பதிவு திருமணங்கள்குறைவாக நடக்கும் மாவட்டங்களில்திருநெல்வேலியும் ஒன்று. விவாகரத்து குறைவாகநடக்கும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்.முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ளமாவட்டமும் எங்கள் திருநெல்வேலி தான்.தமிழ்நாட்டில் சென்னை,கோவைக்குபிறகு அதிகஇளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லை தான். "District of Youth "ஒரு ஆண்டில் வெளியாகும் தமிழ் படங்களில் 50%படங்கள் திருநெல்வேலியைn மையமாககொண்டே வெளிவருகிறது....அப்புறம் எங்க அல்வா...கொடுத்துட்டேன்......!I am proud to be an "TIRUNELVELIAN "..

Wonderful tirunelveli...

Wonderful tirunelveli

என் நண்பர்கள் உங்க ஊர்ல டைம் பாஸ்க்கு ஊர் சுத்த இடம் இருக்கானு கேட்டார்கள் . . எங்க ஊர்ல இல்லாத இடமா இதோ கேட்டுக்கோ ..
அ) பாபநாசம் நீர்வீழ்ச்சி ஆ) மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி இ) குற்றாலம் ஈ) கிருஷ்ணாபுரம் உ) திருக்குறுங்குடி ஊ) முண்டந்துறை புலிகள் புகலிடம் எ) களக்காடு புலிகள் புகலிடம் ஏ) கூந்தக் குளம் பறவைகள் புகலிடம் ஐ) அரியகுளம் பறவைகள் புகலிடம்.

பாபநாசம் நீர்வீழ்ச்சி
அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஓர் அழகு தான்.

குற்றாலம்
திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும். குற்றாலத்தைப் பற்றி இலக்கியங்கள் நிரம்பப் பேசுகின்றன. இவ்வுரைச் சிறப்பித்து 'குற்றால குறவஞ்சி' என்ற இலக்கியம் எழுந்துள்ளது. குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது.

தேன் அருவி
தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று.

செண்பக அருவி
தேனருவி ஒன்றரைக்கல் வரையிலும் மலையில் சிற்றாறாக ஓடி, பிறகு செண்பக மரங்கள் நிறைந்த காட்டு வழியே பாய்ந்து, முப்பது அடி உயரமுள்ள அருவியாக விழுகிறது. இதனால் செண்பக அருவி என்று பெயர் பெற்றுள்ளது.

பொங்குமாகடல்
செண்பக அருவியிலிருந்து 2 கல்தூரம் பாய்ந்து, இருநூற்று எண்பது அடி உயரமுள்ள அருவியாகக் குதிக்கிறது. இந்த இடத்தில் ஒரே வீழ்ச்சியாக இல்லாமல் பாறை மேல் விழுந்து பொங்கி விரிந்து கீழ்நோக்கி விழுகிறது. இப்படி பொங்கி எழுவதால் இதைப் பொங்குமாகடல் என்று கூறுகிறார்கள்.

புலி அருவி
குற்றாலத்துக்குக் கிழக்கே முக்கால் மைல் தொலைவில் புலி அருவி இருக்கிறது. புலிகள் வந்து நீர் அருந்துவதால் இப்பெயர் பெற்றது.

ஐந்தருவி
சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும். செண்பக அருவிக்கு அருகில் செண்பக தேவி அம்மன் கோயில் இருக்கிறது. சாரல் காலத்தில் வெயில் மழை தூறுவதும் மாறி மாறி நடக்கும். நீர்த்திவலைகள் துள்ளித் தெறிப்பது சிறு மழைபோல் தோன்றும். பெரிய அருவியில் சாரல் காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். குற்றாலநாதர் கோயிலுக்குத் தென்புறம் குறும்பலா இருக்கின்றது. ஐந்தருவிக்குப் போகும் வழியில் கூத்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சித்திர சபை என்னும் சிறிய கோவில் ஒன்றும் உள்ளது. அருவி விழுகின்ற ஒலி நெடுந் தொலைவு வரை கேட்கும். உடலில் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு நின்றால் சீயக்காய் தேய்க்காமலே எண்ணெய் போய் விடும். குற்றாலத்தில்-இரவிலும் பகலிலும் அருவியைப் பார்ப்பது அழகுதான்.

கிருஷ்ணாபுரம்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன. வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது. தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி. சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது.

திருக்குறுங்குடி
இது நெல்லையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை சூழ்ந்த மகேந்திர மலை அடிவாரத்தில், நம்பியாற்றின் கரையில் இருக்கிறது. பெருமாளுக்கு நம்பிராஜன் என்று பெயர். இத்தென்கலை வைணவக் கோயிலில் சிவபெருமானும் இருக்கிறார். நால்வர், பைரவர், சண்டிகேசுவரர் முதலிய பரிவார தேவதைகளும் இருப்பதால் சிவன் கோயில் வைணவத்தலமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உண்டு. இங்குள்ள சிவனை "பக்கல் நின்றார்" என்று திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் பெருமாளைப்பற்றி பெரியாழ்வார், திருமழிசைஆழ்வார் நம்மாழ்வார், சடகோபர், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரால் பாடல் பெற்ற தலமாகும். இங்குதான் நம்மாழ்வார் பிறந்தார். இக்கோவிலில் கார்த்திகை, பங்குனி, ஏகாதசித் திருவிழாக்கள் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றன. யாளி மண்டபம், இரத மண்டபம், ஜஂயர் மண்டபம், சித்திர கோபுரம், இசக்கியம்மன், ஆண்டாள், குறுங்குடிவல்லித் தாயார் சந்நிதிகள் உள்ளன.

முண்டந்துறை புலிகள் புகலிடம்
திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

களக்காடு விலங்குப்புகலிடம்
திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம். இங்கு பலவகையான தாவரங்களும், பறவைகளும் காணக்கூடியதாக இருக்கின்றன. இங்குப் புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன. இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் : மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை; இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.

 

கண்களே..கண்களை நம்பாதே..


கண்களே..கண்களை நம்பாதே..
--------------------------------

அவசரமாய் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எதையும் நின்று பார்த்து நிதானமாய் யோசித்து முடிவு செய்யும் பொறுமை யாருக்கும் இல்லை.

நம் அறிவுக் கண்களைக் குருடாக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் ஏமாந்து போய் விடக் கூடாது.

காந்தியையும், நேருவையும் இழிவுபடுத்தும் பல்வேறு வகையிலான முயற்சியில் சிலர் திட்டமிட்டு இறங்கியுள்ளனரோ என்கிற ஐயம் எழும்பியிருக்கிறது.

அந்த வகையில் இன்னும் பல புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப் போது உலா வரலாம்.

நாம்தான் கவனமாய் இருக்க வேண்டும்.

கண்ணால் காண்பதுவும் பொய்..காதால் கேட்பதுவும் பொய்..!
 

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்......

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

 
 1. பணிவு

ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.

2. கருணை

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.

3. பழகும் தன்மை

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

4. அரவணைக்கும் குணம்

உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்டு, அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

5. இணைந்து பணியாற்றும் தன்மை

நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.

6. முடிவெடுக்கும் திறன்

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும்.

இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.
 

உலக அழகிப்போட்டி எந்த ஆண்டில் துவக்கப்பட்டது?
-1951
காமரூபம் என்று அழைக்கப்பட்ட நாடு எது?
-அஸ்ஸாம்
யசோதர காவியம் எந்த மத காப்பியமாகும்?
-சமண மதம்
மழைக்கடவுள் யார்?
-இந்திரன்
வர்ஜின் என்பவர் யார்?
-ரோமானியப்பேரரசின் அரசவைக்கவிஞர்
ஏதென்ஸில் மக்களாட்சியை நிறுவியவர் யார்?
-பெரிக்ளி
உலகின் மிகப்பெரிய ‘காமா’தொலைநோக்கி உள்ள
இடம் எது?
- மாஸ்கோ
இந்தியாவில் மிக அதிக நீளமான நதி எது?
- கங்கை
இந்தியாவின் மிகப் பெரிய மசூதி உள்ள இடம் எது?
-புதுடெல்லி (ஜிம்மா மஜூதி)
மிகப்பெரிய கோள் எனப்படுவது எது?
- ஜூபிடர்
மிக விரைவாக பறக்ககூடிய பறவை எது?
- சுவிப்ட்
மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள்
உள்ள மாநிலம் எது?
- கேரளா
மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் எங்குள்ளது?
-கல்கத்தா
இந்தியாவில் மிக நீளமான அணை எது?
-ஹிராகுட்
தமிழ் நாட்டிலுள்ள மிகப் பெரிய நீர்பாசன அணைக்கட்டு எது?
-மேட்டூர் அணை
‘ஆர்யபட்டா’ விண்வெளியில் ஏவப்பட்டது எப்போது?
-1975 .....