Monday, November 3, 2014

சிந்தனை கார்னர்...

பல தன்மைகள் வாய்ந்த நபர்களின் தொடர்பை விட, சில நல்ல புத்தகங்களின் உறவு நன்மையை அளிக்கும்.

குழந்தைகளை வளர்க்கும்போது தான், உன் பெற்றோரின் அருமையை உன்னால் உணர முடியும்.

பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வீதிகளின் வழியே நடப்பவன் தோல்வி என்ற வீட்டையே அடைவான்.

சரியாக சிந்திக்கத் தெரிந்து கொண்டால், உலகத்தையே மாற்றி விடலாம்.


1] பிறரைச் சீர்திருத்தும் பணியைவிட, தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.

2] பகைவனின் புன்சிரிப்பைவிட, நண்பனின் கோபம் நல்லது.

3] கடமையைச் செய்ய முயலுங்கள், அப்போது தான் உங்களின் தகுதியை அறிந்து கொள்ள முடியும்.

4] விவேகம் உள்ளவனுக்கு இன்பமும் இல்லை,துன்பமும் இல்லை.

5] தொடர்ந்து ஆர்வம் கோண்டிரு; கண்டிப்பாக் முன்னேற்றம் வந்தே தீரும்.

6] தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.

7] சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.

8] சேற்றில் விழுவது ஒன்ரும் இழிவில்லை. அங்கேயே கிடப்பதுதான் இழிவு.

9] இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.

10] நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.

11] உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால்,ஜெயிக்கிறது.

12] உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.

13] நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது.

சோம்பேறி, காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறியை மதிப்பதில்லை.

கண்கலங்கி கவலைப்படாதீர்கள்; கவலைப்படுவதால் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

`முடியாது', `நடக்காது' என்ற வார்த் தைகளை எப்போதும் சொல்லக் கூடாது.

மூளையை பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென் றால் துருபிடித்து விடும்.

கொடுப்பதற்கும், பெறுவதற்கும் உரிய விலைமதிப்பில்லாத பரிசு, அன்பு.

No comments:

Post a Comment