Sunday, November 16, 2014

சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....


சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....

》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்
》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்
》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்
》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்
》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்
》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்
》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்
》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)
》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்
》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம்
》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்... இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!

No comments:

Post a Comment