Tuesday, November 4, 2014

இதயம் பற்றிய பொன்மொழிகள்...

இதயம் பற்றிய பொன்மொழிகள்...
 
 
 
 
 
                    
 
* இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது. இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள். -காந்திஜி

* ஏழை இதயத்தின் மகிழ்ச்சியே இறைவனுக்குத் தேர்த்திருவிழா. -அறிஞர் அண்ணா

* ஒரு பெண்ணின் இதயம் கருணையின் கோவிலாக மாறும்போது அதற்கு இணையான அன்பு இந்த உலகத்தில் எங்குமே இல்லை. -மார்ட்டின் லூதர் கிங்

* தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர். -ஓர் அறிஞர்

* இதயம் ஒருமுறை பெற்று சொந்தமாக்கிக் கொண்ட எதையும் பிறகு ஒருபோதும் இழப்பதில்லை. -எச்.டபிள்யூ. பீச்சர்

* இதயம் மட்டும் உறுதியாக இருந்தால் சுண்டெலிகூட யானையைத் தூக்கிவிடும். -திபெத்திய பழமொழி

* இதயம் என்பது ஒரு சிறந்த தர்க்கவாதி. -செண்டல் பிலிப்ஸ்

* உலகில் எதுவுமே இல்லாமல் இருப்பவனுக்குத்தான் எதையும் தாங்கும் இதயம் உண்டு. -கண்ணதாசன்

* ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சுவர்க்கம். மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம். -ஐசக் வால்டன்

* அறிவுக்குத் தெரியாத பல காரணங்கள் இதயத்தில் இருக்கின்றன. -பாஸ்கல்

No comments:

Post a Comment