Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Sunday, November 16, 2014

சமநிலைப்பாடு!
`````````````````````````````




* உன்னை பாராட்டுகின்றனர்
என கர்வம் கொள்ளாதே...
நாளை உன்னை
மதிக்காமலும் இருப்பர்!

* இன்று அலட்சியம் செய்வதால்
மனம் வெம்பி போகாதே...
நாளை உன்னை
பாராட்டி மெச்சுவர்!

* அன்பாக இருப்பதாக
அப்படியே நம்பி விடாதே...
நாளை உன்னை
வெறுத்தும் பேசுவர்!

* துரோகத்தை கண்டு
துயரம் கொள்ளாதே...
நாளை உன்னிடம்
மன்னிப்பு கேட்பர்!

* உச்சபட்ச மகிழ்ச்சியென
உற்சாகக் கூச்சலிடாதே...
நாளை உனக்கதுவே
வருத்தமாய் மாறி விடும்!

* துன்பம் வந்ததென
துவண்டு போகாதே...
நாளை உனக்கதுவே
வெற்றியாய் மாறி விடும்!

* வசதி வந்து விட்டதென
ஆட்டம் போடாதே...
நாளை உனக்கு
பணமே பாரமாகும்!

* ஏழ்மையை எண்ணி நீ
தாழ்மை உணராதே...
நாளை நீயும்
செல்வந்தர் ஆகிடலாம்!

* இன்பமோ, துன்பமோ,
ஏற்றமோ, தாழ்வோ,
அன்போ, துரோகமோ,
வசதியோ, ஏழ்மையோ

* இரண்டையும்
ஒன்றாகப் பார்!

* ஒருபோதும்
வாழ்வின் பிடித்தம்
வற்றிப் போகாது
உன் கையை விட்டு வெற்றி
விட்டுப் போகாது!

Sunday, November 2, 2014

பொன்மொழிகள்...

பொன்மொழிகள்...
1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
6. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
7. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
10. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
11. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
12. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
13. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
14. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

Saturday, October 18, 2014

என்ன தான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், “ஹிரோ ஹோண்டா” , “ஹிரோயின் ஹோண்டா”வாக ஆகாது.
அதே மாதிரி என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், “லேடீஸ் பிங்கர்”, “ஜெண்ட்ஸ் பிங்கர்” ஆகாது.

“மகளைப்பெற்ற அப்பாகளுக்கே தெரியும்,
முத்தம் காமத்தில் சேராதது என்று”
இந்த வரிகளை சினிமாவில் எழுதுன கவிஞர் யாருயா?
உன் பேச்சை கேட்டு அவ அப்பன் முன்னாடியே அவளுக்கு முத்தம் கொடுத்துட்டேன் அவன் அருவாவோட என்னை இப்ப தேடிட்டு இருக்கான்.

பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணினா பஸ் வரும். ஆன ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா “ஃபுல்லு” வருமா….. குவாட்டர் கூட வராது…..

என்ன தான் மனுஷனுக்கு வீடு, காரு, பங்களான்னு இருந்தாலும், ரயில் ஏறணும்னா பிளாட்பாரத்திற்கு வந்து தான் ஆகணும்…. இது தான் வாழ்க்கை

பேசும் முன் கேளுங்கள்
செயல்படும் முன் யோசியுங்கள்
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
விமர்சிக்கும் முன் பொருத்திருங்கள்
வழிபடும் முன் மன்னியுங்கள்
கைவிடும் முன் முயற்சிசெய்யுங்கள்

நண்பன் 1: ஏண்டா பழத்தை சாப்டுட்டு
தோல மட்டும் எனக்கு தர
நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன்
அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?
நண்பன் 1: ??????? ………..

டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும் ஒரு நாள் தான் வித்தியாசம். ஆனா ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும் ஒரு வருஷம் வித்தியாசம் இது தான் உலகம்.

இட்லி மாவை வைச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வைச்சு சப்பாத்தி போடலாம்
ஆன கடலை மாவை வைச்சு கடலை போட முடியுமா?

செருப்பு இல்லாம நாம நடக்கலாம், ஆன நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது….

Saturday, October 4, 2014

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
01. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
02. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
03. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
04. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
05. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
06. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
07. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
08. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
09. கஷ்டம் தான் … ஆன முடியும்.
10. நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே.குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா?சரி,சரி.இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்குஇன்னொரு பெயர் உண்டு-. எட்டு முறை எழுந்தவன். எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.
 

Saturday, June 14, 2014

எவ்வளவோ மேல்...

1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .

2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .

4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .

5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .

8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .

9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .

10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.