Sunday, November 2, 2014

தங்க நகை வாங்கும்போது பகீர் மோசடிகள் – அதிர்சித் தகவல்

தங்க நகை வாங்கும்போது பகீர் மோசடிகள் – அதிர்சித் தகவல்...
 

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றா ல் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல் லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால் ஐம்பதுகிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்ற னர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக் கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்ப து கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங் கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இல வசம் என்று கூறி மக்களை மேலு ம் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொ ண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.
அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தரு கிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்தி லும் இருக்குமா என்று தெரியவில்லை.
இரண்டாவது மோசடி:
சொக்கத்தங்கம் எனப்படும் தனித்தங்கத்தி ல் நகை செய்யமுடியாது. அதில் செம்புகலந் தால்தான் நகை செய்யமுடியும். ஆ யிரம் கிராம் நகை செய்ய 916கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த் து செய்யப்படும் நகை 22 காரட் என் றும் 916 KDM என்றும் சொல்லப்படு கிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்துவிட்டு 1000 கிரா மு க்கும் தங்கத்தின் விலை போடப்படு கிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடி யாக உள்ளது.
மூன்றாவது மோசடி:
தங்கத்துக்கு இன்றைய காலத் தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரு ம்பும் வகையில் தயார் செய்வத ற்கானகூலியாகும். ஐந்து பவுன் தங்கத்தில் ஒருநகை வாங்கி னால் 5 பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்கவேண் டும். அதைக் குறிப்பிட்ட நகை யாக செய்ததற்கான கூலியை யும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந் தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
ஆனால் ஐந்து பவுன் தங்கத்து க்கும் நம்மிடம் பணம் வாங்கி க் கொண்டு அதற்கான கூலியையும் நம் மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என் ற பெயரில் ஒரு தொகையையும் வாங் கிக் கொ ள்கின்றனர்.
அதாவது மேற்கண்ட நகையைச் செய்யு ம் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தை யும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பண ம் வாங்காமல் இன்னொரு அரைபவுனு க்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந் து விடுகிறார்கள்.
நகை செய்யும்போது அரை பவுன் சே தரமாகஆகி வீணாகிவிட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறை யானது தான். ஆனால் தங்கத்தில் எ துவுமே சேதாரம் ஆவது கிடையாது.
நகைசெய்யும்போதும் பட்டை தீட்டும் போ தும் தூள்களாக கீழே சிந்துபவை சேதார மாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர் கள் பயன்படுத்திக்கொள்வார்ள். இதற்கெ ல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கி க் கொள்கி ன்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காணமுடியவில் லை.
அதுபோல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார் கள். அது நியாயமானதுதான். ஆனால் நா ம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக் கிவிட்டு எடைபோட்டு அந்த எடைக்கு உள் ள பணத்தைத்தர வேண்டும். அவர்கள்
விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில் லை. அவர்கள் வாங்கும் விலை யைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மா றாக நாம் நாற்பது கிராம் நகையை விற் கச்சென்றால் அதில் கால்வாசி க்கு மேல் குறைத்துத் தான் தருவார் கள்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத் தின் மீது வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான். படித்த நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்

No comments:

Post a Comment