Sunday, November 2, 2014

9 பேர் அமரும் வகையில் 'சைனா பைக்'!

 
9 பேர் அமரும் வகையில் 'சைனா பைக்'!


‘இது சைனா மேக்கா மச்சான்?’ என்று இதுவரை போன் மற்றும் எலெக்ட்ரானிக் ஐட்டங்களைத்தான் கேட்டு வந்தோம். இனிமேல், பைக்குகளையும் அப்படிக் கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது.
நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த பைக், சத்தியமாய் சைனா மேக்தான். மத்திய சீனாவில், ஜெங்ஷூ என்னும் மாகாணத்தில், இந்த நீ...ளமான எலெக்ட்ரிக் பைக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 9 பேர் வரை அமரக்கூடிய இந்த பைக் 4.7 மீட்டர் நீளம்.

பெரிய ஸ்கூட்டர் கம்பெனியோ, பைக் கம்பெனியோ இதைத் தயாரிக்கவில்லை. ஒரு எலெக்ட்ரிக் பைக் கடை ஒன்றில், திடீரென்று இந்த பைக் நிறுத்தப்பட்டிருந்தது கண்டு, வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்து விட்டார்களாம்.
இந்த பைக்கில் இரண்டு பேட்டரிகள் இருக்கின்றன. விடிய விடிய நீங்கள் இதை சார்ஜ் போட்டால் 60 கி.மீ வரை பைக்கை ஓட்டலாம். வழக்கம்போல், இதை ஓட்ட லைசென்ஸும் தேவையில்லை.

ஆனால், பால் பாக்கெட் வாங்க, மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கவெல்லாம் இதை எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால், இதை பார்க்கிங் பண்ணுவதற்கே சில ஏக்கர்களில் நிலம் தேவைப்படுமே!

கின்னஸ் ரெக்கார்டுக்காக இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த எலெக்ட்ரிக் பைக்!

- தமிழ்

No comments:

Post a Comment