Friday, December 27, 2013

சிரிக்கலாம் வாங்க !!!

சிரிக்கலாம் வாங்க !!!

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி
ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. .
என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்
காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக
அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு
ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?-
லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -

அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்...
------------------------------------------------------------------------------------------
செங்குத்தான மலைச்சரிவில் தவறி விழுந்தவன் ஒரு மரத்தின் வேரைப்பிடித்துக்கொண்டு தொங்கினான்.

“கடவுளே என்னைக் காப்பாத்தக்கூடாதா,” என்று ஓலமிட்டான்.

உடனே அசரீரியாய் கடவுளின் குரல் கேட்டது. “பக்தா என்மீது உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறதா?”

“என்ன ஆண்டவா இப்படிக் கேட்கிற? விசுவாசம் இல்லாமலா என் குடும்பத்தோட வருசா வருசம் உன் கோவிலுக்கு வந்து பூசை செய்றேன்? விசுவாசம் இல்லாமலா என் கம்பெனிக்கு உன் பெயரை வைச்சிருக்கேன்...”

“சரி உண்மையிலேயே என் மேல் நம்பிக்கை இருந்தால் நீ பிடித்துக்கொண்டிருக்கிற அந்த வேரை விட்டுவிடு.

சில நொடிகள் மவுனம். கடவுளுக்கே அவன் என்ன செய்யப்போகிறான் என்று புதிராகிவிட்டது.

அவன் இப்போது மறுபடியும் உ ரக்க ஓலமிட்டான்:
.
.
.

“என்னை வேற யாராவது காப்பாத்தக்கூடாதா...”



 ஒருத்தன் டாக்டர்கிட்ட போய்ட்டு, "டாக்டர்.. வர வர என் பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது?? என்ன பண்ணலாம்?? டாக்டர்??"ன்ன்னு கேட்டான்..

டாக்டர் சொன்னாரு.. "மொதல்ல ஒரு 15 அடி தூரத்துல இருந்து எதாவது பேசிப்பாரு.. அப்பவும் அவ திரும்பலைன்னா, கொஞ்சம் கிட்டப் போய்ட்டு பேசிப்பாரு.. அப்பவும் திரும்பலைன்னா அவ பின்னாடி போய்ப் பேசிப்பாரு... அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு" சொன்னார்..

இவனும் வீட்டுக்கு போய்ட்டு பொண்டாட்டி கிச்சன்ல சமையல் பாத்திரத்தை கழுவிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

கடைசியா அவ பின்னாடி போய் நின்னுட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்..

அவ சொன்னா...
.
.
"நாலாவது முறையா சொல்றேன்.. இன்னிக்கு உப்புமா"ன்னு...


ஙே!!!!!
--------------------------------------------------------------------------------------------
புதிதாக ஒரு பள்ளியில் சேர்ந்த சற்றே இளம் வயது ஆசிரியர்
ஒருவர்,

மாணவர்களை பதில் தெரியாத கேள்வி(தட்டானுக்கு
சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்,
அவன் யார்? போல) கேட்டு திணற அடிக்க வேண்டும் என்பதற்காக,

வகுப்பில் நுழைந்தவுடன் மாணவர்களை நோக்கி ,
"சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் 100 கிலோ மீட்டர்
என்றால் என் வயது என்ன? " என்றார்.

ஒரு மாணவன் சற்றும் தாமதியாமல் "32 வயது" என்றான் .

ஆசிரியருக்கோ ஆச்சரியம் தாங்க முடிய வில்லை."எப்படி கண்டுபிடித்தாய்?"என்றார் .


மாணவன் அமைதியாக கூறினான் .

" ஐயா , எங்கள் ஊரில்
ஒரு அரைப் பைத்தியம் இருக்கிறது .
அதற்கு வயது 16 "
-----------------------------------------------------------------------------
ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து
அடியில நின்னுகிட்டு, கம்பத்த தட்டி,.........

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல
யாரும் இல்ல போல இருக்கு!

இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா....

மாடில லைட் எரியுது பாருங்க!

No comments:

Post a Comment