என் சக வயது நண்பர்களே நாம் இழந்தவை .
..
தமிழ் கோனார் உரைதான் நம்மில் பலர்
தேர்ச்சி பெற்றதின் முழ காரணம் .
அதுவும் அதனுடன் இலவச இணைப்பாக
வரும் அந்த சிறிய இலக்கன
தாளை பயன்படுத்தி எதனை பரிச்சையில்
தேறி இருப்போம்.
தேன் மிட்டாய் .. பள்ளி செல்லும் வழியில்
பெட்டி கடையில்
ஒரு ரூபாய்க்கு நான்கு வாங்கி நண்பர்களுடன்
பகிர்ந்து உண்ட காலம்
ஆசிரியார் பாடம் நடத்தும்
போது அருகில் இருக்கும் நண்பனுடன்
தமிழ் புத்தகத்தின் கடைசி பக்க தமிழக
வரைபடத்தை பார்த்து " நான்
இங்கே சென்றுள்ளேன் " என்று பெருமிதம்
கொள்வது .
ஒவ்வொரு வருடமும்
கடைசி பரிட்சை முடிந்த
பின்பு பேனாக்களால்
மையை மாறி மாறி அடித்து கொள்வது.
வகுப்பறையில் அருகில் அமர்திருக்கும்
நண்பன் எழுந்து மீண்டும் அவன்
அமர்வதற்குள்
பென்சிலை அல்லது பேனாவை அவன்
உக்காரும் இடத்தில்
வைத்து அவனை அலரவிடுவது .
தெரியாத புரியாத பேய்
கதைகளை நாமே இயக்கி அது உண்மை என்று அடித்து பேசி மகிழ்ந்தது.
பொதிகை தொலைகாட்சியின் சக்திமான் ..
ஒரு மணிநேர விளையாட்டு நேரம்.. என்ன
விளையாடலாம் என யோசிக்கும்
முன்பே முடிந்துவிடும்..
காலையில்
ஒரே ஒரு முறை மட்டுமே வருகை பதிவு (ATTENDANCE).
இது இல்லமால் பல கல்லூரி மாணவர்கள்
அல்லாடுகிறார்கள்.
வகுபிற்கு உள்ளே வரும்
போது ஆசிரியரிடம்
கையை நீட்டிக்கொண்டு அனுமதி கேப்பது.
(எதற்காக கையை நிட்டினோம்
என்று இன்னும் விளங்கவில்லை).
வகுப்பினுள் ஆசிரியர் நுழைந்தவுடன்
அனைவரும் எழுந்து SALUTE வைத்து "
GOOD MOOOOOORNING
MISSSSSSSSSSS " என்று ராகம்
பாடுவது.
முக்கியமாக இந்த MISS என்கிற
வார்த்தை.
எந்த காலில் எந்த காலுறை போடவேண்டும்
என்று தெரியாமல் விழி பிதுங்கிய
காலம்.
நம் ஓவிய கலையை பள்ளி சுவரிலும்,
அமரும் மற்றும் படிக்கும் பலகையிலும்,
நோட்டு புத்தக கடைசி பக்கத்திலும்
காட்டியது.
வரலாறு புத்தகத்தில்
காந்தி தாத்தாவிற்கு குருந்தாடி வைப்பது.
நேரு மாமாவிற்கு சார்லி சாப்ளின்
மீசை வரைவது.
ஆசிரியர் நம் பக்கத்தில் அமர்த்தால்
பெருமிதம் கொள்வது .
படிக்காத தேர்வின் பொது சரியாக
வயிற்று வலி வரவைப்பது. தேவை பட்டால்
வெங்காயத்தை ஆக்கத்தில் வைத்து உடம்பில்
சூடேற்றி காய்ச்சல் வரசெய்வது.
அது நம் வசந்த கலாம். "
ரகு பத்தி ராகவ ...." தேசிய
ஒருமை பாட்டை பாடிய காலம்
அப்போது அதற்கு அர்த்தம் தெரியாது..
இப்போதும் தெரியவில்லை! ஆனால்
அதேநேரத்தில் சாதி என்ற வார்த்தைக்கும்
அர்த்தம் தெரியாது.
No comments:
Post a Comment