Friday, December 27, 2013





1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை
தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று
புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால்
எல்லா சீசனுக்கும் விற்கும்....

4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள்
அம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.

5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி
ஊத்துவான்.

6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு
சவுரி என பெயர் வந்தது.

7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால் நாய்க்கு தெரியாது.
ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.

8. நாய் நாக்கை பயன்படுத்தாமல் வாலை பயன்படுத்தினால் அதற்கு நிறைய
நண்பர்கள் இருப்பார்கள்.

9. ஜலதோஷம் பிடித்திருக்கும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எல்லாக்
கழுதைகளும் எப்போதும் ஜலதோஷத்துடனே இருக்கின்றன.

No comments:

Post a Comment