Sunday, November 10, 2013

இரத்த தானம், உடல் உறுப்பு தானம்

உதிரக்கொடை (இரத்த தானம் ) :
  • ஒருவர் உடலில் இருக்கும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி மட்டுமே அளிப்பது இரத்த தானம்
  • உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே அளிக்க முடியும்.
  • எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்.
  • சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்.
  • பலன் : உதிரம் தேவைப்படும் பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம். இரத்தம் கூறுகளாக பிரிக்கப்பட்டால் ஒரே முறையில் பல பிணியாளர்க்ளுக்கு பயன் படும்.
  • உதிரக்கொடை அளிக்க விரும்பினால் : அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் உதிரவங்கியை அணுகவும்
பார்வைக்கொடை (கண் தானம் / கருவிழிப்படலகொடை) :
  • உயிருடன் உள்ளவர் கண் தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்யலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்கள் எடுக்கப்படும்.
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எடுக்கப்பட்ட கண்களின் கருவிழிப்படலம் (கார்னியா) அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
  • பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு.
  • ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும்
  • கண்ணாடி அணிந்தவர்கள், ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட தானம் செய்யலாம்
எலும்பு கொடை (எலும்பு தானம்) :
  • உயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம் செய்ய முடியாது. எலும்பு தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்களால் இறந்தவரின் எலும்புகள் தானம் செய்யப்படலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
  • எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
  • பலன் : பல பிணியாளர்களுக்கு
மூளைச்சாவு உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :
  • உயிருடன் உள்ளவர் உறுப்பு தானம் செய்ய முடியாது.  (முக்கிய குறிப்பு : உயிருடன் உள்ள நபர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, அல்லது தங்கள் விரும்பும் ஒருவருக்கு தங்களின் ஒரு சிறுநீரகம் மட்டும் அல்லது  கல்லீரலின் ஒரு பகுதி மட்டும்  தானம் செய்ய சட்டத்தில் ஒரு வழிமுறை உள்ளது)
  • அது தவிர உயிருடன் உள்ளவர் உறுப்பு  தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் மூளைச்சாவால்  இறந்த பின்னரே அவரது உறவினர்கள் மூளைசாவு அடைந்தவரின் உறுப்புக்களை தானம் செய்ய இசைவு தரலாம்
  • மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.
  • சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், தோல், எலும்பு, மூட்டுக்கள் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • பலன் : பல பிணியாளர்களுக்கு
முழு உடல்கொடை (உடல்தானம்) :
  • உயிருடன் உள்ள ஒருவர் முழு உடல் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம்
  • இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும். விபத்து என்றால் முழுஉடல்தானத்திற்கு உடல் பெறப்படமாட்டாது
  • உடல் உறவினர்களிடம்  அளிக்கப்படாது.
  • உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
  • அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும், இதய ஒரு போக்கிகளும் (இதய வால்வுகள்) எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
  • பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால், இதய ஒரு போக்கிகளால் பல  பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு.
  • உறுப்பு தானம் என்பது வேறு !! உடல் தானம் என்பது வேறு. உறுப்பு தானம் என்பது மூளைச்சாவு எற்பட்டால் மட்டுமே. அதன் மூலம் மற்றொரு உயிரை காக்கலாம். உடல் தானம் என்பது இயற்கை மரணம் ஏற்பட்டால் மட்டுமே.

No comments:

Post a Comment