Wednesday, November 27, 2013

ஆப்பிளின் தமிழ்ப்பெயர் எத்தனை பேருக்கு தெரியும்

ஆப்பிளின் தமிழ்ப்பெயர் எத்தனை பேருக்கு தெரியும்
 


 தமிழ்க்கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பழம் ஆப்பிளாகத்தான் இருக்கும். ஆதாம் ஏவாள் சாப்பிட்ட பழமாச்சே. ஆனால் பெரும்பாலும் தமிழிலும் ஆப்பிள் என்றே குறிப்பிடுகின்றனர். தெரிந்துக்கொள்ளுங்கள், ஆப்பிளின் தமிழ்ப்பெயர் அரத்திப்பழம். இன்னும் சில பழங்கள்: ஆரஞ்சு - நரந்தம்பழம், ஸ்ட்ராபெர்ரி – செம்புற்றுப்பழம், முக்கியமா வேண்டியது: லிச்சி – விளச்சிப்பழம்.

செந்தாழை என்றால் நம்மில் சிலருக்குத் தெரியாது.
உண்மையில் செந்தாழையை அன்னாசி என்ற பெயரிலே நமக்கு நன்கு தெரியும் .
அன்னாசி என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும்.இதன் தமிழ்ப்பெயர் செந்தாழை ஆகும்
அன்னாசி என்று பிற மொழியிலிருந்து ஒலிப்பெயர்ப்பதை விட ,
செந்தாழை என்று இனிய தமிழிலிலே அழைக்கலாமே

No comments:

Post a Comment