Wednesday, October 1, 2014

அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-


அருகம்புல் “ஜூஸின்” பயன்கள் :-


*சிறந்த இரத்த சுத்தியாக அருகம்புல் “ஜூஸ்” விளங்குகிறது. வயிற்றுப்புண், வாயுக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை இது சீராக்குகிறது.

*உடலில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த குறைபாடுகளை இது குணப்படுத்துகிறது.

*சொறி, சிரங்கு, வெண் புள்ளி, தேமல், அரிப்பு, விஷக்கடி போன்ற தோல் வியாதிகளுக்கு அருகம்புல் மிகச்சிறந்த மருந்து.

*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 500 மிலி., சாப்பிட்டால் இதிலிருந்து மீண்டு வரலாம்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் “ஜூஸ்” மிகவும் உகந்தது. சர்க்கரையால் ஏற்படும் கால் எரிச்சல், முழங்கால் வலி, உடல் சோர்வு, கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாக குறையும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக அல்லது குறைந்த இரத்தப்போக்கை இது சமன் செய்கிறது. இதேபோல் உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளைப்படுதலை அருகம்புல் “ஜூஸ்” குணப்படுத்துகிறது.

*அருகம்புல்லில் வைட்டமின் - ஏ, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

*ஆங்கில மருந்துகளை உட்கொள்வது நம்மால் தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆனால், இவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டியுள்ளது. அருகம்புல் “ஜூஸ்” குடிப்பதால் இதுபோன்ற பக்க விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் உரிய நேரத்துக்கு சாப்பிடும் பழக்கத்தை நம்மில் பலர் கடைபிடிப்பதில்லை. இதனால் பல்வேறு வயிற்றுக்கோளாறுகளை சந்திக்கிறோம். நீண்ட நேரம் பணிபுரிவதால் ஏற்படும உடல் அயற்சி மற்றும் நரம்புக் கோளாறுகளுக்கு அருகம்புல் சிறந்த “டானிக்”.

இத்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட “சர்வரோக நிவாரணி” யாக திகழும் அருகம்புல்லின் மகத்துவத்தை இனியாவது நாம் உணர வேண்டும். அருகம்புல் சாறு தினமும் பருகி உடல்நலன் பேணுவோம்.

தினமும் டீ, காஃபி குடிப்பதைப்போலவே அருகம்புல் “ஜூஸை” குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அருந்தலாம்.

அருகம்புல் “ஜூஸ்” தயாரிப்பது எப்படி?

கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி துவங்கி வீட்டின் கொல்லைப்புறத்தில் நாம் போட்டிருக்கும் தோட்டம் வரை அனைத்து இடங்களிலும் அருகம்புல்லை எளிதாகப் காணலாம். அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி, தூய்மைப்படுத்த வேண்டும். இதன் பிறகு நம் தேவைக்கேற்ப அருகம்புல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து உரல், கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதன் பிறகு அரைத்தெடுக்கப்பட்ட அருகம்புல் பிரித்தெடுக்க வேண்டும்.

இப்போது இளம் பச்சை நிறத்துடன் கூடிய அருகம்புல் “ஜூஸ்” தயார். ஜூஸ் தயாரிக்கும் போது கொஞ்சம் துளசியை சேர்த்தால், சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லது.

No comments:

Post a Comment