Sunday, October 12, 2014

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகிறான்.

ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமைகொள்ளும் கணத்தில் முட்டாள் ஆகிறான்.

அன்பை ஆயுதமாக ஏந்தியவனுக்கு தோல்விகள் இல்லை…
மறக்காமல் இருப்பது மட்டுமே அன்பல்ல…
என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதே உண்மையான அன்பு…

உங்களது உண்மையான உறவுகளை மறந்தும் வெறுக்க வேண்டாம்,
பிரிவும், முறிவும் உயிர் போவதை காட்டிலும் அதிக வலியைத் தரும்…

முயற்சிகள்பலமுறை என்னை கைவிட்டது; ஆனால் முயற்சியை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை.
ஆயிரம் தடவை உன் வாழ்க்கை உன்னை அழவைத்தால், ஆயிரம் வழிகளில் நீ சிரிப்பதற்கு வழி தேடு.

குறை சொல்லுபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்
ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்வதற்கு அவர்கள் தான் உளிக்கொடுக்கின்றனர்.

இந்த உலகில் எவரும் பரிசுத்தமானவர்களோ, முழுமையான நல்லவர்களோ இல்லை. ஒரு சிறிய குற்றத்திற்காகவோ அல்லது சிறிய தவறுக்காகவோ, நீ ஒருவரை ஒதுக்கிவைக்க ஆரம்பித்தால், நீ எப்போதும் தனிமையாக தான் இருக்க வேண்டியதிருக்கும். எனவே குறைந்த மதிப்பீட்டை செய்… அதிக அன்பு செய்…

பெட்ரோல் விலை – புலி
தங்க விலை – மான்
காய்கறி விலை – கங்காரு
தொலைப்பேசி கட்டணம் – முயல்
என் வருமானம் – ஆமை

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக அமைய வேண்டும்.

கடமையை செய்தால் வெற்றி…
கடமைக்கு செய்தால் தோல்வி…

மற்றவர்களுடன் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே! அவன் வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறான்… நீ வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறாய்… இரண்டு மனிதர்களை ஒரு நோக்கத்திற்காக படைக்க கடவுள் முட்டாள் இல்லை.

No comments:

Post a Comment