Monday, September 29, 2014

பேஸ்புக் பதிவை குறிப்பிட்ட நபர்களுக்குத் தெரியாமல் மறைக்க...

பேஸ்புக் பதிவை குறிப்பிட்ட நபர்களுக்குத் தெரியாமல் மறைக்க....




“பேஸ்புக்” என்பது இன்று இணையதளத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும்போது குறிப்பிட்ட சிலருக்கு நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து, மற்ற அனைவருக்கும் தெரியும்படி செய்வது எப்படி என்று பார்ப்போம்...

முதலில், குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின், "Public" என்பதில் “கிளிக்” செய்யுங்கள். சிலருக்கு அது "Friends" என்று இருக்கக்கூடும். வரும் "DropDown" மெனுவில் "Custom" என்பதை “கிளிக்” செய்யுங்கள். அப்போது வரும் பகுதியில் "don't share with these people or lists" என்பதில், குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு லிஸ்ட் வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம். ஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராகக் கொடுங்கள். நிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டுக்கொள்ளுங்கள். பின்னர் லிஸ்ட் பெயரை தேர்வு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது.

இது முடித்துவிட்டு “Save Changes” கொடுத்துவிட்டு Post செய்துவிட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது.

No comments:

Post a Comment