Thursday, September 11, 2014

கரும்புள்ளிகள் குறைய…

கரும்புள்ளிகள் குறைய…
————————————-



* தக்காளியை நறுக்கி, மூக்கின் நுனியில்
இருக்கும் கரும் புள்ளிகள் மேல் தேய்த்து
வந்தால், கரும் புள்ளிகள் குறையும்.

———————————————————————-—-

* பப்பாளி எந்த வகை சருமத்துக்கும் நல்லது.
நம்முடைய சருமத்தின் மீது படிந்திருக்கும்
இறந்து போன செல்களை நீக்கி, சருமத்தை
மேலும் மென்மையாக்க பப்பாளி உதவுகிறது.
பப்பாளியை கூழாக்கி, பேஸ் பேக்காக பயன்
படுத்தலாம்.

————————————-————————————-
* ஆரஞ்சு தோலை நிழலில் உலர்த்தி பொடி செய்து,
முகம் டல்லாக இருப்பதாக நீங்கள் உணரும்போது,
ஒரு சிட்டிகை பொடியை எடுத்து அதனுடன்
சிறிதளவு நீர் சேர்த்து, குழைத்து, முகத்தில் பூசவும்.
இந்த பேஸ்பேக் உலர்ந்ததும், முகம் கழுவிப் பாருங்கள்.
அப்புறம் தெரியும், ஆரஞ்சு செய்யும் ஜாலம்.

No comments:

Post a Comment