உங்கள் முகத்தை கழுவும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்...
* முகத்தை முதலில் இளம் சூடான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அப்போதுதான் துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும்.* அடுத்து பேஸ் வாஷ் அல்லது சோப்பு அல்லது கடலை மாவு கொண்டு முகத்தில் வட்டமாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
* மென்மையான சுத்தமான டவல் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். முகத்தை அழுத்தி தேய்க்கக்கூடாது.
* முகம் துடைக்க தனி டவல் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் உபயோகித்ததை பயன்படுத்த கூடாது.
* முகத்தில் ஈரத்தை துடைத்த பின் டோனர்- ரை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கவும். திறந்த துவாரங்கள் அப்போதுதான் அடைபடும்.
* தூங்குவதற்கு முன் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதே போல் வெளியில் சென்று விட்டு வந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும்.
* ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறையாவது சோப் இல்லாமல் முகம் கழுவ வேண்டும்.
No comments:
Post a Comment