Thursday, September 18, 2014

ஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், என உள்ளது. மறைநீர் என்று ஒன்று உள்ளது. இவை விளை பொருளை உருவாக்க மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்ட நீரே, மறைநீர் ஆகும். இதனை டோனி ஆலன் என்பவர் கண்டுபிடித்தார்.

மனித மூளையின் வளர்‌ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது.

அரளிச் செடிகள் விபத்தை குறைக்கிறது ஏனெனில் வாகனங்களில் இருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை உட்கிரகித்து குறைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அதனால் தான் பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச் சாலைகளில் அரளிச் செடிகள் வைக்கபட்டுள்ளன. இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. இவை ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment