Monday, July 28, 2014

திரிகோணாசனம்....

திரிகோணாசனம்...

தோற்றம்:

முக்கோணத் தோற்றம். 'திரி’ என்றால் மூன்று. 'கோண’ என்றால் கோணம். 'ஆசனம்’ என்றால் இருக்கும் நிலை. இந்த ஆசனத்தின் உச்சநிலையில், உடல் முக்கோணம் போன்று இருக்கும்.

பயிற்சி முறை:

= நேராக நிற்கவும். மார்பை விரித்து, தோள்பட்டையைத் தளர்வாகத் தொங்கவிடவும்.

= கை விரல்கள் இணைந்து கீழ்நோக்கி இருக்கட்டும். உள்ளங்கைகளை இரு பக்கவாட்டிலும் தொடையை ஒட்டியபடி வைத்துக்கொள்ளவும்.

= கால்களை அகட்டியபடி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் மெதுவாகத் தோள்பட்டை அளவுக்கு உயர்த்தவும். இப்போது மூச்சை உள்ளிழுக்கவேண்டும்.

= மூச்சை வெளியே விட்டுக் கொண்டே சரியாக வலது பக்கவாட்டில் வலது கைவிரல்கள் வலது பாதத்தைத் தொடும் வரை வளையவும்.

= இடது கை உயர்ந்து வலது கையும் இடது கையும் ஒரே நேர்க்கோட்டில் அமையும் வண்ணம் இருக்க வேண்டும்.

= இடது உள்ளங்கை முன்னோக்கியிருக்க, பார்வை இடது கைவிரல்களின் மேல் இருக்கவேண்டும்.

= மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே கால்களை அசைக்காமல் எழுந்து கைகளைக் கிடைமட்டத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

= பிறகு மூச்சை வெளிவிட்டுக்கொண்டே கைகளைக் கீழேயும் வலது காலை இடது காலுக்கு அருகிலும் கொண்டுவரவும். இதே போல் மறுபக்கமும் செய்யவேண்டும்.

பலன்கள்:

அட்ரினல் சுரப்பிகள் தூண்டப்படும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், கணையம் முதலியவை நன்றாக அழுத்தப்படும். இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகும். கெண்டைக்கால், தொடைப்பகுதி நன்கு வலுவடையும்.

எச்சரிக்கை:

கீழ் முதுகு, முழங்கால் வலி உள்ளவர்கள் மெதுவாக, மிகவும் கவனமாகச் செய்யவேண்டியது அவசியம்.
 
Photo: திரிகோணாசனம்

No comments:

Post a Comment