Thursday, July 10, 2014

தெரிஞ்சுக்கோங்க..

பஸ்களில் பயணம் செய்யும் போது சிலர் வாந்தி எடுப்பர். இதற்குக் காரணம் நம் காதுகளின் உட்பகுதியில் மூன்று அரை வட்ட வடிவக் குழாய்கள் உள்ளன. இவை மூளையுடன் ஒரு நரம்பின் மூலம் நேரடித் தொடர்பு கொண்டவை. இந்தக் குழாய்கள் சிலருக்கு மிகவும் நுண்ணியதாக அமைந்து விடுவதுண்டு. தொடர்ச்சியான பயணத்தில் இக்குழாய்கள் மிக அதிகமாக அதிர்வடைகின்றன. இதனால், அருகில் உள்ள வேகஸ் நரம்பும் அதிர்வடைகிறது. இதுதான் வாந்தி எடுக்கும் உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.


சராசரியாக ஒரு மனிதன் 70 ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால், தூக்கத்தில் 28 ஆண்டுகளும், படிப்பில் 10 ஆண்டுகளும், பொழுதுபோக்கில் எட்டு ஆண்டுகளும், ஓய்வு சுகமின்மை ஆகியவற்றில் ஆறு ஆண்டுகளும், பயணத்தில் ஐந்து ஆண்டுகளும், சாப்பிடுவதில் நான்கு ஆண்டுகளும், உடை அணிவதிலும், வெளியில் செல்வதில் மூன்று ஆண்டு களும், வேலை செய்ய ஆறு ஆண்டுகளும் செலவிடப் படுகின்றன.

No comments:

Post a Comment